புதிய 100 ரூபாய் நோட்டுக்கு ஏற்ப ஏடிஎம்-யை மாற்றியமைக்க 100 கோடி ரூபாய் செலவு!வெளிர் ஊதா நிறத்தில் புதியதாக அறிமுகமாகும் 100 ரூபாய் நோட்டுகளை வைப்பதற்கு ஏற்ற வகையில் ஏடிஎம் இயந்திரங்களைச் மாற்றியமைக்க 100 கோடி வரை செலவு செய்ய வேண்டும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. 

Sponsored


பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாகப் புதிய வடிவிலான ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வெளியிட்டு வருகிறது ரிசர்வ் வங்கி. இந்த வகையில், புதிய வடிமைப்பில் 2000, 500, 200, 50 மற்றும் 10 ரூபாய் புதிய நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

Sponsored


Sponsored


இதைபோலவே அடுத்த மாதம், புதிய வடிவில் வெளிர்  ஊதா நிறத்தில் 100 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளது ரிசர்வ் வங்கி. இவ்வாறு புதியதாக அறிமுகப்படுத்தப்படும் 100 ரூபாய் தாளை ஏடிஎம் இயந்திரத்தில் பெறுவதற்கு ஏற்ற வகையில் ஏ.டி.எம் இயந்திரங்களை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். 

இதற்காக, இந்திய முழுவதும் சுமார் இரண்டு லட்சம் 40 ஆயிரம் ஏ.டி.எம் இயந்திரங்களை மாற்றியமைப்பதற்கான முதல்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. ``புதிய 100 ரூபாய் தாளை ஏ.டி.எம் இயந்திரத்தில் பெறும் வகையில் ஏ.டி.எம் இயந்திரத்தை மாற்றியமைக்க மட்டும் 100 கோடி செலவாகும்" என்கிறார் ஏ.டி.எம் இயந்திரங்களை வடிவமைக்கும் நிறுவனத்தின் இயக்குநர் பாலசுப்ரமணியன். 

``ஏ.டி.எம் இயந்திரங்களை மாற்றி அமைக்கும் பணி முழுவதும் நிறைவடைய 12 மாதங்களுக்கு மேலாகும்" என்கிறார் 'ஹிடாச்சி பேமெண்ட் சர்வீஸஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லோனி ஆன்டனி. இவர், ``இதற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 200 ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்றவகையில் இன்னும் பல ஏ.டி.எம் இயந்திரங்களை மாற்றும் பணியே இன்னும் முழுமையாக முடிவடையவில்லை" என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். 

பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான பின்பு, பொதுத்துறை வங்கிகளின் ஏ.டி.எம் பல செயல் இழந்தன. அவ்வாறு செயல் இழந்த பல ஏ.டி.எம்-கள் இன்னும் சரி செய்யப்படாமலேயே உள்ளன. மேலும், ஏ.டி.எம் இயந்திரங்களை மாற்றியமைக்க, செய்யப்படும் செலவு 100 கோடி ரூபாயையும் வாடிக்கையாளர்களாகிய பொதுமக்களிடமே வங்கிகள் வசூலிக்கவும் யோசித்து வருகின்றன.Trending Articles

Sponsored