`லாரிகள் வேலைநிறுத்தம் - சென்னையில் காய்கறி விலை உயரும் அபாயம்!Sponsoredலாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சென்னையில் காய்கறி விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

`நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, வருடத்துக்கு ஒருமுறை சுங்கக் கட்டணமாக நாடு முழுவதும் 18 ஆயிரம் கோடி ரூபாய் தொகையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்; பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயிப்பதோடு, ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்; லாரி உள்ளிட்ட மோட்டார் வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இரண்டாம் நாளாக இன்று லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஸ்டிரைக்கில் நாடு முழுவதும் 65 லட்சம் லாரிகள் ஈடுபட்டுள்ளன. இரண்டாம் நாளாக தொடரும் வேலைநிறுத்தம் காரணமாக  அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, வேலை நிறுத்தத்தை  மத்திய மாநில அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored