`அவர்கள் இருந்திருந்தால்!' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடுSponsored``ஜெயலலிதாவும் கருணாநிதியும் இருந்திருந்தால் நம்பிக்கையில்லாத் தீர்மானமே வேறுமாதிரியாக இருந்திருக்கும்'' என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர தெலுங்கு தேசம் முடிவுசெய்தது. இதையடுத்து கடந்த 20-ம் தேதி நடைபெற்ற  குரல் வாக்கெடுப்பிலும், மின்னணு வாக்கெடுப்பிலும் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியுற்றதையடுத்து, தெலுங்கு தேசத்தின் கனவு தகர்ந்தது. நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, ``முழு ஆந்திரப் பிரதேசமும் நீதியை எதிர்பார்த்துக் காத்திருந்தது, ஆனால், எங்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மேலும், ஆந்திராவுக்கு மத்திய அரசு செய்துள்ள துரோகங்கள் பற்றியும் நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க உள்ளேன்'' என்று தெரிவித்திருந்தார். 

Sponsored


இந்த நிலையில், இதுகுறித்து சந்திரபாபு நாயுடு நேற்று (21-ம் தேதி) நாளேடு ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்தார். அதில்,  ``ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்காமல் மத்திய அரசு எங்களை வஞ்சித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத்திய அரசுக்கு எதிராக, தெலுங்கு தேசம் கட்சி சார்பில் எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைத்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தோம். இதற்கு அண்டை மாநிலமான தமிழ்நாடு தார்மீக அடிப்படையில் ஆதரவு அளித்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மாநில உரிமைகளுக்காக ஒரு மாநிலம் போராடும்போது, அதற்கு அண்டை மாநிலம் ஆதரவு அளிப்பதுதானே முறை? இந்த நேரத்தில், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற வலிமையான தலைவர்கள் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருந்தால் எவ்வாறிருக்கும் என நினைத்துப் பார்க்கிறேன்?

Sponsored


ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்திருப்பார் என நம்புகிறேன். ஏனென்றால், மாநில உரிமைகளில் அவர் நம்பிக்கை வைத்திருந்தார். மத்திய அரசால் மாநில உரிமைகள் மறுக்கப்பட அவர் அனுமதித்திருக்க மாட்டார். அண்டை மாநிலத்தின் தார்மீக குரலுக்கு அவர் ஆதரவு அளித்திருப்பார். அதேபோல, தி.மு.க. தலைவர் கருணாநிதி செயல்படும் நிலையில் இருந்திருந்தால், மாநில உரிமைகளை நசுக்கும் மத்திய அரசின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்திருப்பார். அண்டை மாநிலங்கள் நட்புறவாக இருக்க வேண்டும். நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பாகத் தமிழக அரசு மீது எனக்கு வெறுப்புணர்வு இல்லை. ஆனால், அவர்கள் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்திருக்க வேண்டும். ஏனென்றால், இன்று ஆந்திரத்துக்கு நடப்பது நாளை தமிழகத்துக்கு நடக்கலாம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருக்க வேண்டும்'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.Trending Articles

Sponsored