`ஒரு வருடத்தில் 19,799 குழந்தைகள் உயிரிழப்பு '- மகாராஷ்ட்ரா அமைச்சரின் அதிர்ச்சி தகவல்!Sponsoredமகாராஷ்ட்ராவில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 19,799 குழந்தைகள் இறந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்ட்ராவில் குறைந்த எடை, குறை பிரசவம், பிறவி சுவாச கோளாறு, தொற்று நோய், மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய காரணங்களால் கடந்த 2017 ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் சுமார் 19,799 குழந்தைகள் இறந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தீபக் சவந்த் தெரிவித்துள்ளார். இதைச் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடரில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இறந்த குழந்தைகளின் சரியான வயதை அவர் தெரிவிக்கவில்லை.  

Sponsored


Sponsored


மேலும் இது குறித்து பேசிய அமைச்சர் தீபர் சவந்த், குழந்தைகள் உயிரிழப்பைத் தடுக்க தக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், மாநிலத்தின் பெண்கள் நலம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் வாயிலாக ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பெண்கள் குழந்தை பெற்ற உடன் அடுத்த 42 நாள்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும் என்றும், குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஒரு வருடம் வரையிலும் இலவச சிகிச்சை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். Trending Articles

Sponsored