அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி - ஹைதராபாத் காவல் துறையின் முயற்சிSponsoredஹைதராபாத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக்கும் முயற்சி மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. வீதிகளில் திரிந்த 9,000 பிச்சைக்காரர்களைப் பிடித்த போலீஸார், முதற்கட்டமாக 300 பேரை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

தெலங்கானா தனி மாநிலமாக உருமாறிய பிறகு, மாநிலத்தின் வளர்ச்சிக்கான பல நடவடிக்கைகளை சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசாங்கம் எடுத்து வருகிறது. இதன் முயற்சியாக, தலைநகர் ஹைதராபாத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடை வீதிகள், வழிபாட்டு இடங்கள், பொழுதுபோக்கு இடங்கள், சாலைகள் உள்ளிட்ட இடங்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 9,000 பிச்சைக்காரர்களைப் போலீஸார் பிடித்துள்ளனர். அவர்களில், முதற்கட்டமாக 300 பேர் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு, அவர்களுக்கு உணவு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அனைத்தும் வழங்கப்பட உள்ளன. 

Sponsored


இது குறித்து சிறைத்துறை அதிகாரி நரசிம்ஹா கூறுகையில், `தற்போது, பிச்சைக்காரர்களுக்காக இரண்டு மறுவாழ்வு மையங்களைத் தொடங்கியுள்ளோம். ஹைதராபாத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றுவதே எங்களது குறிக்கோள். இந்தத் திட்டத்தை மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பிடிக்கப்பட்ட பிச்சைக்காரர்கள், தங்களுடைய வீடுகளுக்குச் செல்ல விரும்பினால், அவர்களின் உறவினர்களை அழைத்து அறிவுரை வழங்கி புதிய வாழ்க்கையைத் தொடங்க வழி செய்கிறோம்' என்றார் மகிழ்ச்சியுடன். 

Sponsored
Trending Articles

Sponsored