`இந்தியாவில் ஆண்டுக்கு 57,000 குழந்தைகள் உயிரிழப்பு' - அதிர்ச்சி தகவல்இந்தியாவில் பிறக்கும் குழந்தைகள் செப்சிஸ் என்னும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்குத் தோராயமாக 57,000 குழந்தைகள் உயிரிழப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

Sponsored


இதுகுறித்து `தி ஜெர்னல் ஆஃப் இன்பெக்ஷன்' என்ற மருத்துவப் பத்திரிகையில் வெளியான தகவல், ``உலகில் பயன்பாட்டில் இருந்த நோய் தடுப்பு மருந்துகள், 2000-2010 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் 5,000 கோடியில் இருந்து 7,000 கோடி யூனிட்டாக அதிகரித்துள்ளது. அதிலும், இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிகளவில் நோய்த் தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. மருத்துவர்களின் பரிந்துரைகள் இல்லாமல் நோய்த் தடுப்பு மருந்துகளை இந்நாட்டு மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால், பிறக்கும் குழந்தைகளுக்கு செப்சிஸ் என்ற நோய்த் தொற்று தாக்குகிறது. உதாரணமாக, இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 57,000 குழந்தைகள் செப்சிஸ் என்ற நோய் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். அமெரிக்காவில், 20 லட்சம் பேர் செப்சிஸால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் 23,000 பேர் மரணிக்கின்றனர். 

Sponsored


தாய்லாந்தைத் தவிர மற்ற உலக நாடுகளில், மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல், நோய்த் தடுப்பு மருந்துகள் எடுத்துக்கொள்ளும் விதி கடைப்பிடிக்கப்படுவதில்லை. இந்தியா, சீனா, இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான் போன்ற வளரும் நாடுகளில், மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் நோய்த் தடுப்பு மருந்துகளை உட்கொள்ளக் கூடாது என்று விழிப்பு உணர்வு போதுமானதாக இல்லை'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored