`20 பேர் பாலியல் வன்கொடுமை; புதைக்கப்பட்ட பெண்`- போலீஸை பதறவைத்த காப்பகம்Sponsoredபீகாரில் உள்ள காப்பகம் ஒன்றில் 16 சிறுமியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து இங்கு, போலீஸார் விசாரணை நடத்தி வருகிறனர். 

பீகார் மாநிலம், முஸாபர்பூரில் அரசு நிதியுடன் செயல்பட்டு வரும் காப்பகம் ஒன்றில், 40-க்கும் மேற்பட்ட சிறுமியர் மற்றும் இளம் பெண்கள் தங்கியுள்ளனர். அவர்களில், 16 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக அந்தக் காப்பகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரை அடுத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

Sponsored


இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `இந்தக் காப்பகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகார் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியுள்ளோம். அப்பெண்ணின் புகாரில், `காப்பகத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து நடந்து வருகிறது. பெண் ஒருவர் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். அப்பெண்ணின் உடலைக் காப்பக வளாகத்தில் புதைத்துள்ளனர்' என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னரே, காப்பகத்தில் போலீஸார் சோதனை நடத்தினர். புதைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இடத்தில் சடலத்தைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மருத்துவப் பரிசோதனை முடிவில் 44-ல் 16 பெண்களுக்குப் பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்துள்ளது உறுதியானது. மீட்கப்பட்ட பெண்கள் அனைவரையும் மதுபானி, மோகமா மற்றும் பாட்னா ஆகிய நகரில் உள்ள காப்பகத்தில் சேர்த்துள்ளோம். சம்பவத்தில் தொடர்புடைய 10 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாவட்ட நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்' என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored