`எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள்!' - எழுத்தாளர் ஹரீஷுக்கு பினராயி விஜயன் ஆதரவுSponsoredமலையாளத்தில் சர்ச்சைக்குள்ளான 'மீசை' நாவலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார், கேரளா முதல்வர் பினராயி விஜயன்.

கேரள எழுத்தாளர் ஹரீஷ் எழுதிய 'மீசை' என்ற நாவல் குறித்த தொடர், மலையாள பத்திரிகையான மாத்ருபூமியில் பிரசுரமானது. 'மீசை' நாவலில் கோயிலுக்குச் செல்லும் பெண்கள் மற்றும் பூசாரிகுறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக சங்க் பரிவார் அமைப்புகள் மற்றும் அர்ச்சகர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். எழுத்தாளர் ஹரீஷுக்கு கொலை மிரட்டல்களும் வந்துள்ளன.

இதையடுத்து, ஏற்கெனவே 3 லட்சம் பிரதிகள் அச்சடித்துவைத்துள்ள 'மீசை' நாவலை வெளியிடாமல் நிறுத்திவைப்பதாக ஹரீஷ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஹரீஷுக்கு ஆதரவாக பா.ஜ.க அல்லாத கட்சிகளைச் சேர்ந்தவர்கள் குரல்கொடுத்துவருகின்றனர். இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கருத்துச் சுதந்திரத்தில் எழுத்தாளர்களுக்கு ஆதரவாக கேரள அரசு நிற்கும். எழுத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலை அனுமதிக்க முடியாது. 'மீசை' நாவல் மீதான விவாதங்களைக் கண்டு ஹரீஷ் மனதைத் தளரவிடக் கூடாது. எழுதுவதை நீங்கள் நிறுத்திவிடக் கூடாது. எழுத்தின் வலிமையைக்கொண்டு தடைகளைக் கடந்துசெல்ல வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored