`மகாராஷ்டிராவில் தனித்துப் போட்டி?' - சிவசேனாவுக்குச் செக் வைக்கும் அமித் ஷாமகாராஷ்டிராவில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடும் வகையில், அனைத்துப் பணிகளையும் தொடங்குமாறு நிர்வாகிகளிடம் அமித் ஷா கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Sponsored


2019-ம் ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக மகாராஷ்டிராவில் பா.ஜ.க, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் முதற்கட்ட பணிகளைத் தொடங்கி விட்டன. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க அல்லாத மூன்றாவது அணியை உருவாக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் முயற்சி செய்து வருகின்றனர். 

Sponsored


இந்நிலையில், மும்பை, தாதர் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில், கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கலந்துகொண்டார். கட்சியினருடன் கலந்து ஆலோசித்த அமித் ஷா, `வரும் 2019-ம் ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடும் வகையில் பணிகளைத் தொடங்க வேண்டும்' என்றும் `மாநிலத்தில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளிலும், 288 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுவதற்காக ஆயுதப் பணிகளைத் தொடங்குமாறு மாநில நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

Sponsored


ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் குறைந்தது 25 பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். அவர்கள், அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை மக்களிடம் முறையாகக் கொண்டு செல்ல வேண்டும்' என உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.Trending Articles

Sponsored