8 வயது சிறுமியின் மூளையில் நாடாப்புழு முட்டைகள்! பெற்றோர் அதிர்ச்சிSponsoredஹரியானாவில் 8 வயது சிறுமியின் மூளையில் 100 நாடாப்புழு முட்டைகள் இருந்தது பெற்றோர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


ஹரியானாவை சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த சில மாதங்களாகக் கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை அங்குள்ள மருத்துவமனைகளில் காண்பித்துள்ளனர். இவரை பரிசோதித்த மருத்துவர்களும் தலைவலிக்கான மாத்திரைகளைக் கொடுத்து வந்துள்ளனர். இருந்தபோதும் இவருக்கு அந்த வலி குறைந்ததாகத் தெரியவில்லை. பிறகு, ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவரது நிலைமை கவலைக்கிடமானது. சிகிச்சைகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. மாத்திரை மற்றும் மருந்துகளால் சிறுமியின் உடல் எடையும்கூட ஆரம்பித்தது. 40 கிலோவில் இருந்து 60 கிலோவாக அதிகரித்தது. 20 கிலோ எடை கூடுதலானது. இதன் காரணமாகச் சிறுமியால் நடக்க இயலவில்லை, மூச்சுத்திணறலும் அதிகரித்தது. 

Sponsored


இதையடுத்து சிறுமியின் தலையில் ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது அவரின் தலையில் 100 நீர்க்கட்டிகள் இருந்தது தெரியவந்தது. நன்கு பரிசோதித்த மருத்துவர்கள் அது நீர்க்கட்டிகள் அல்ல நாடாப்புழுக்கள் என்ற அதிர்ச்சிகர தகவல்களைத் தெரிவித்தனர். வயிற்றிலிருந்து ரத்த நாளங்கள் மூலம் இந்த முட்டைகள் மூளையை அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டபோது சுயநினைவின்றி இருந்துள்ளார். 

Sponsored


இதுகுறித்து பேசிய மருத்துவர்கள், `சிறுமி நாடாப்புழுக்களால் பாதிக்கப்பட்ட உணவு வகைகளை உட்கொண்டிருப்பார். இதனால் எதிர்பாராத விதமாக சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார். ரத்த நாளங்கள் மூலம் இந்த முட்டைகள் மூளையை அடைந்துள்ளன. இது நரம்பியல் மண்டலத்தைத் தாக்கியதால் அவருக்குத் தலைவலி மற்றும் வலிப்பு ஏற்பட்டுள்ளது. நாடாப்புழுக்களின் முட்டைகளை அழிப்பதற்காகச் சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நடக்க ஆரம்பித்துள்ளார். விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்’ என்றனர்.Trending Articles

Sponsored