மோடியின் மிருகத்தனமான 'புதிய இந்தியா' இது ! -கொந்தளிக்கும் ராகுல்Sponsored`மோடியின் மிருகத்தனமான புதிய இந்தியாவில், மனிதத் தன்மைக்குப் பதிலாக வெறுப்பு உணர்வு அதிகரித்துள்ளது' என்று மோடி ஆட்சியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் ராகுல் காந்தி. 

ராஜஸ்தான் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள அல்வார் பகுதியில், சில தினங்களுக்கு முன் பசுவைக் கடத்த முயன்றதாக இரண்டு நபரை பொதுமக்கள் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில், சம்பவ இடத்திலேயே அக்பர் கான் என்பவர் உயிரிழந்தார். இந்தத் தாக்குதல் தொடர்பாக மூன்று பேரை போலீஸார் கைதுசெய்து, விசாரணை நடத்திவருகின்றனர். மாநிலத்தில் பல இடங்களில் நீதி கேட்டு மக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்திவருகின்றனர். 

Sponsored


இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில், ராஜஸ்தானில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆங்கில ஊடகத்தில் வெளியான செய்தியை இணைத்துப் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், `பொது மக்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அக்பர் கானை, 6 கிலோ மீட்டர் தூரம் உள்ள மருத்துவமனைக்கு மூன்று மணி நேரத்துக்குப் பிறகே அழைத்துச்சென்றுள்ளனர். ஏன்? வழியில் அவர்கள் தேநீர் குடிக்க இடைவெளி எடுத்திருப்பார்கள். மோடியின் மிருக்கத்தனமான புதிய இந்தியாவில், மனித தன்மைக்குப் பதிலாக வெறுப்பு உணர்வு அதிகரித்து, மக்கள் நசுக்கப்பட்டு உயிரை விடுகிறார்கள்' எனப் பதிவிட்டுள்ளார்.  

Sponsored
Trending Articles

Sponsored