`யானைகளால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறோம்!’ - அமைச்சரின் காரை மறித்து முறையிட்ட கன்னியாஸ்திரிSponsoredகேரள மாநிலம் அட்டப்பாடி அருகே சோலையார் என்ற இடத்தில் அமைச்சர் சென்ற காரை கன்னியாஸ்திரி ஒருவர் பாதியில் மறித்த சம்பவம் வைரல் ஆகியுள்ளது. 

இது தொடர்பாக முகநூலில் வெளியான வீடியோ ஒன்று செம வைரலாகியுள்ளது. கேரள மாநில வனத்துறை அமைச்சர் கே ராஜு சோலையார் என்ற இடத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதி யானைகள் நடமாட்டம் அதிகம் கொண்ட பகுதியாகும். இதனால் அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் அளவில் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து புகார் அளித்தும் வந்தனர். 

Sponsored


இந்நிலையில் அமைச்சரின் வருகையைத் தெரிந்து கொண்ட கன்னியாஸ்திரி  ரின்சி, பாதுகாப்பு வாகனங்கள் சென்ற பின்னர், நேராக அமைச்சர் காரை மறித்து யானைகளால் தாங்கள் அனுபவிக்கும் இன்னல்கள் குறித்துத் தெரிவித்தார். அமைச்சரிடம் நேரடியாக முறையிட்ட அவர் ”இங்கு இருக்கும் சாலைகளை பார்த்தீர்களா..? யானைகளால் நாங்கள் படும் துன்பம் சொல்ல முடியாதது. எங்களின் வீடுகள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்குக் கண்டிப்பாக நடவடிக்கை வேண்டும்” என்றார். 

Sponsored


அப்போது அமைச்சரின் உடன் வந்த அதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்கள், அமைச்சர் கலந்துகொள்ளும் கூட்டத்தில் வந்து புகார் தெரிவியுங்கள். அதற்காக அமைச்சரின் காரை மறிப்பது சரியில்லை எனத் தடுத்தனர். இந்த வீடியோ முகநூலில் அதிகம் பகிரப்பட்டுள்ளது. 
 Trending Articles

Sponsored