ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க மறுத்த நிர்மலா சீதாராமன்!மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததாகக் கூறியுள்ள நிலையில், அவரை சந்திக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Sponsored


தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தன் ஆதரவாளர்களான மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோருடன் டெல்லி புறப்பட்டுச்சென்றார். அவருடைய திடீர் டெல்லிப் பயணம் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியது. இந்நிலையில் இது தொடர்பாக விளக்கமளித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், `மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை மரியாதை நிமித்தமாகச் சந்திக்க வந்தேன். தமது பயணத்தில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. என் சகோதரர் சிகிச்சைக்கு ராணுவ விமானம் வழங்கியதுக்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவித்தேன்' என்று கூறினார்.

Sponsored


Sponsored


இதனிடையே பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகம் சார்பில் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததாகக் கூறியதுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், பன்னீர்செல்வத்தைச் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. மாறாக அ.தி.மு.க எம்.பி மைத்ரேயனை சந்திப்பதற்காக மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது' என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் - நிர்மலா சீதாராமன் இடையேயான சந்திப்பில் மாறுபட்ட தகவல்கள் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.Trending Articles

Sponsored