கமல், ராகுல் மட்டுமல்ல இவரும் 'கட்டிப்புடி வைத்திய' ஸ்பெஷலிஸ்ட்தான்!Sponsoredநாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியை இதுவரை யாரும் விமர்சித்திராத அளவுக்கு விமர்சனம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தொடர் சவால்களை மோடிக்கு விட்ட பிறகு, கடைசியில் அவரைச் சென்று கட்டிப்பிடித்தார். இதே போல பல்வேறு தருணங்களில் தலைவர்கள் பலரை கடுமையாக விமர்சித்த நரேந்திர மோடி , அதே தலைவர்களை நேரில் பார்க்கும்போது இறுகக் கட்டிப்பிடித்திருக்கிறார். விமர்சனங்களை மறக்கடிக்கும் நெருக்கம் அந்த கட்டிப்பிடிப்பில் தெரியும். உள்ளூர் அரசியல்வாதி முதல் சர்வதேச அரசியல் தலைவர்கள் வரை பிரதமர் மோடியை நேரில் சந்தித்த யாரும் இவரின் 'கட்டிப்பிடி வைத்திய'த்திலிருந்து தப்பியிருக்க முடியாது.

2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஃபிரான்ஸ் நாட்டின் அன்றைய அதிபரான ஃபிரான்காய்ஸ் ஹோலண்டே இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, சண்டிகர் வந்திருந்த அவரை வரவேற்ற மோடி முதலில் அவருடன் கைகுலுக்கி கட்டிப்பிடித்தார். அதன் பின்னர் அவரிடமிருந்து நகர்ந்த ஹோலண்டேவை பின்னிருந்து இடுப்பில் மோடி கைவைத்திருப்பது போல புகைப்படங்கள் வெளியாகின. இதனை 'டைட்டானிக்' பட போஸ்டருடன் ஒப்பிட்டு ஏராளமான மீம்ஸ் அப்போது பறந்தன.

Sponsored


Sponsored


2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்து நாட்டு இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேத் இருவரும் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது இந்திய பிரதமர் மோடியை வில்லியம் சந்தித்த போது, கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது, அவரின் கை அச்சு வில்லியம் கைகளில் பதியும் அளவுக்கு இறுக்கமாக இருந்த புகைப்படம் வைரல் ஆனது.  

2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடந்த தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பின் 27வது உச்சிமாநாட்டில் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது மலேசிய நாட்டின் அன்றைய பிரதமரான 'நஜிப் ரசாக்'கை பார்த்தவுடன் அவரைக் கட்டிப்பிடித்தார். அப்போது, வெளியான புகைப்படங்களில் மோடி, நஜிப் ரசாக்கை கட்டிப்பிடிக்கும்போது, நஜிப் ரசாக் மோடி கண்களை பார்க்காமல் தவிர்க்கிறார் என்று பத்திரிகைகள் எழுதின. 

அதே 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டின் அன்றைய பிரதமரான நவாஸ் ஷெரீஃபை மோடி சந்தித்தார். கடந்த பத்தாண்டுகளில் இந்திய பிரதமர் பாகிஸ்தான் செல்வது அதுவே முதல்முறை எனச் செய்திகள் பறந்தன. அன்றைக்கு நவாஸ் ஷெரீஃப்பின் பிறந்தநாளும்கூட. அவரை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார் மோடி. பிறகு, உள்ளூர் செய்தியாளர்களைச் சந்தித்த நவாஸ் ஷெரீஃப் , "அவர் எனது பேத்தியின் நிக்காவிற்காக வருகை தந்திருந்தார்" என்று தெரிவித்தார். இருவரும் கட்டிப்பிடித்த புகைப்படம் அப்போது உலகளவில் அதிகம் பகிரப்பட்டது. அதுவே, மற்றொரு மாநாட்டில் தனக்கு பின்னால் சென்றுகொண்டிருந்த நவாஸ் ஷெரீஃப்பை தவிர்ப்பதற்காக மோடி இறுக்கமாக உட்கார்ந்திருந்த புகைப்படமும் வைரல் ஆனது.

2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் சில கட்சிகளின் கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தது பா.ஜ.க. அதில் தே.மு.தி.க, பா.ம.க ஆகிய கட்சிகளும் அடங்கும். அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வென்றது. பா.ஜ.க கூட்டணி தமிழகத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்றது. பொன்.ராதாகிருஷ்ணனும், அன்புமணியும் மட்டும் எம்.பி ஆனார்கள். பா.ஜ.க வெற்றிபெற்ற பின்னர் விஜயகாந்தும், மோடியும் சந்தித்துக்கொண்டார்கள். அப்போது மோடி விஜயகாந்தை இழுத்துப்பிடித்து கட்டித்தழுவினார். தனது இரண்டு கைகளால் விஜயகாந்தின் முகத்தைப் பிடித்தவாறு மோடி நின்றிருக்கும் புகைப்படம் தமிழகத்தில் டிரெண்ட் ஆனது. "ராசிதான் ராசிதான்... உன் முகமே ராசிதான்" என பி.ஜி.எம்மில் வீடியோவும் வலம் வந்தது.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியோ தானாக சென்று பிரதமரை கட்டி அணைத்து கைகுலுக்கினார். பலரையும் பாசத்தோடு கட்டிப்பிடித்து டிரெண்ட் ஆக்கிய பிரதமர் மோடிக்கே 'கட்டிப்பிடி வைத்தியம்' அளித்து தற்போது கவனம் ஈர்த்திருக்கிறார் ராகுல். Trending Articles

Sponsored