குழந்தைகள் மீதான வன்கொடுமை... தூக்குத்தண்டனை சரியா?Sponsored12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வன்கொடுமை செய்தால் தூக்குத் தண்டனை விதிப்பதற்கான சட்ட வரைவு நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முந்தினம் (23/07/18) தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. அதையொட்டி, இந்த சட்ட வரைவு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இச்சட்டம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறிவிட்டால் உடனடியாக சட்ட வடிவம் பெற்று நடைமுறைக்கும் வந்து விடும். இந்தச் சூழலில் இதுகுறித்து சிலரிடம் கருத்து கேட்டோம். 

நிர்மலா பெரியசாமி; (ஊடகவியலாளர்) 

Sponsored``இவங்களுக்கு எல்லாம் தூக்குத் தண்டனைதான் கொடுக்கணும். சந்தர்ப்ப சூழ்நிலையில் குற்றம் செய்றவங்களுக்கு சட்டம் எத்தனையோ வாய்ப்பு கொடுக்குது. அவங்கள நீண்டநாள் நம்முடைய வரிப்பணத்துல சிறையில வெச்சு இருக்கு. ஆனா, பாலியல் வன்கொடுமை செய்றவங்களை எல்லாம் மனிதநேயத்துடன் அணுக முடியாது. அணுகவும் கூடாது. ஏன்னா, இவங்க எல்லாம் மனித தன்மைக்கு அப்பார்பட்டவங்க. அதுவும் குழந்தைகளை, வன்கொடுமை செய்றவங்களுக்கு தூக்குத்தண்டனை கொடுத்தே ஆகணும். அந்தத் தண்டனையை யாருக்கும் தெரியமா நிறைவேற்றக் கூடாது. அரபு நாடுகள் மாதிரி அவனுங்கள முச்சந்தில நிக்க வெச்சு தூக்குல தொங்க விடணும். பதினொரு வயசு உள்ள சிறுமியை ஏழு மாசம் இத்தனை பேர் வன்கொடுமைவு செஞ்சு இருக்காங்களே, அது எவ்ளோ கொடுமை. கேட்டா, குடிப்பழக்கம் அதான் அவங்கள அப்படி சிந்திக்க வெச்சுதுன்னு சொல்லுவாங்க. ஏன் அதே குடி போதையில பெத்த அம்மாகிட்ட நடந்துக்க முடியுமா? ஒரு கொலைக்கு இன்னொரு கொலைக்குன்னு தீர்வாகாதுதான். ஆனா, சமூகத்தில அமைதி நிலவணும்னா கட்டுப்பாடுகளும், தண்டனைகளும் இருந்தே ஆகணும். பயிர் நல்லா வளரணும்னா களை எடுத்துதான் ஆகணும். தஷ்வந்த் போன்றவனை உயிரோடு விட்டா என்ன ஆகும். இவனுக்கு மனிதத் தன்மைக்கு என்ன தொடர்பு இருக்கு? நான், தூக்குத்தண்டனை கண்மூடித்தனமா ஆதரிப்பவள் இல்லை. பேரறிவாளன் போன்றவர்களுக்கு அரசாங்கம் மனித நேயத்தைக் காட்டாலம், ஆனால், இந்த மாதிரி தவறு இழைப்பவர்களுக்கு ஒருபோதும் இரக்கம் காட்டக் கூடாது என்பது என் கருத்து" என்றார். 

Sponsored


சுகந்தி; (மாநில பொதுச் செயலாளர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்)


``இதுபோன்று கொடுஞ்செயல் புரிகிறவர்களுக்கு மரண தண்டனை என்பது உணர்வுரீதியாக அணுகுகிறபோது சரியானதாகவே இருக்கும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. இவங்களுக்கெல்லாம் தூக்குத்தண்டனைதான் சரி என்று ஆவேசப்படும் மனிதர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். ஆனால், தூக்குத்தண்டனை என்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல. குறிப்பாக, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்குத்தண்டனை என்பது ரொம்பவும் ஆபத்தான சட்ட வரைவாகவே இருக்கும். காரணம், சிறுமிகளை வன்கொடுமைக்கு உட்படுத்துகிறவர்கள், இந்தக் குழந்தை நம்மைக் காட்டிக்கொடுத்தால் தூக்குத்தண்டனை கிடைத்துவிடுமே. எதற்காக உயிருடன்  விட்டு வைக்க வேண்டுமென அவர்களை எளிதில் கொலை செய்துவிடும் வாய்ப்பு அதிகம். எனவே, இந்தத் தண்டனையை உறுதிப்படுத்துவதற்கு முன் எல்லாக் கோணங்களில் இருந்தும் சட்ட நிபுணர்கள் யோசிக்க வேண்டும். இந்த சட்டத்தைக் கொண்டுவரும் அரசாங்கத்திடம் நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான், ஏற்கெனவே இந்தியாவில் பெண்களுக்கு ஆதரவாக இருக்கும் பாதுகாப்பு சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துங்கள். பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் வெறும் 24 சதவிகிதம்தான் பதிவாகிறது. அப்படி சட்டத்துக்கு முன் கொண்டுவந்து நிறுத்தப்படுபவர்களும் தங்களின் சாதி, மத அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி வெளியே வந்துவிடுகிறார்கள். சிறுமி ஆசிபா வழக்கில் சிக்கிய குற்றவாளிகளுக்கு யாரெல்லாம் பாதுகாப்பு கொடுத்தார்கள் என்று கவனித்தீர்கள்தானே. பொதுவாகவே தண்டனை என்பதைப் பற்றி நாம் பெரிதும் அலசாமல் ஆண்டாண்டு காலமாக இருக்கிற ஆணாதிக்கச் சிந்தனையை எப்படி அகற்ற முடியும் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். குடும்பம், சமூகம், அரசு, சினிமா, சீரியல், கதைகள், இவைகளில் மங்கிக் கிடக்கும் பிற்போக்குத்தனங்களைக் களைய வேண்டும். மனிதனுக்குள் இருக்கும் ஆணாதிக்க சிந்தனைகளை இவைகள்தான் காலத்துக்கு ஏற்றாற்போல் புதுப்பித்து இருக்கின்றன. 

இதையெல்லாம் மறைத்துவிட்டு, தூக்குத்தண்டனைக் குறித்து பெருமைப்படுவது என்பது நம் சமூகத்தை நாமே அவமானப்படுத்துவதற்குதான் சமம்" என்றார். 


ஹரி பரந்தாமன் ; (ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி) 


``ஐ.பி.சி வரைச்சட்டம் தயாரிக்கும்போதே பாலியல் வன்கொடுமை செய்றவங்களுக்கு ஏன் தூக்குத்தண்டனை இல்லன்னு கேட்டீங்கன்னா, அந்தக் குற்றத்தை செய்யும்போது சாட்சின்னு யாரும் எப்பவும் இருக்க மாட்டாங்க. அதனாலே ரேப்பிஸ்ட் வன்கொடுமை செய்தவர்களையே கொலை பண்ண வாய்ப்பு அதிகம். ஆகையினாலே, இப்போ அந்தக் குற்றம் புரிகிறவர்களுக்குத் தூக்குத் தண்டனைன்னு வந்தா அது அந்த சிறுமிகளுக்கு ஆபத்தானதாகவே முடியும். பொதுவாகவே பல மேலை நாடுகள்ல தூக்குத்தண்டனைங்கிறது இல்லை. ஏன்னா, தூக்குத் தண்டனைகளால் குற்றத்தைக் குறைக்க முடியாதுன்னு அவங்களுக்குத் தெரியும். பெண் சமூகத்துக்கு எதிராக பாலியல் குற்றங்கள் இங்கே குறைக்கணும்னா தீர்வு தூக்குத் தண்டனை இல்லை. ஒரு சிறுமியை வன்கொடுமை செய்யும் அளவுக்கு ஒரு மனுஷன் ஏன் வக்கிரம் ஆகுறான்னு சமூகம் சிந்திக்கிறதுலதான் இருக்கு" என்றார். Trending Articles

Sponsored