`என் வீட்டிலும் குரங்குகள் தொல்லை..!' - வெங்கைய நாயுடு பதிலால் மாநிலங்களவையில் சிரிப்பலைSponsored`என் வீட்டிலும் குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளது; குரங்குகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்' எனக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு அளித்த பதில் மாநிலங்களவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. 

மாநிலங்களவையில் நடக்கும் Zero Hour என்ற வழக்கமான அலுவல் நேரத்தில், இந்திய தேசிய லோக் தல் கட்சியைச் சேர்ந்த ராம்குமார் காஷ்யப் (Ram Kumar Kashyap), `தலைநகரில் குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளது. பயிர் உள்ளிட்ட தாவரங்களை நாசமாக்கி விடுகிறது. அதுமட்டுமல்லாமல், சலவைத் துணிகளை உலர்த்துவதற்காக வெளியே போட முடியவில்லை. குரங்குகளின் அட்டகாசத்தைத் தடுக்க அரசு எத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது' என்று கேள்வி எழுப்பினார். 

Sponsored


இதற்குப் பதிலளித்த, மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கைய நாயுடு, `தன் வீட்டிலும் குரங்குகள் தொல்லை உள்ளது. இதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நல்ல வேளை, விலங்கு உரிமை ஆர்வலர்கள் மற்றும் மத்திய அமைச்சரான மேனகா காந்தி இங்கு இல்லை' என்று பதிலளித்தார். இவரின், பதிலால் உறுப்பினர்கள் அனைவரும் கைதட்டிச் சிரித்தனர்.

Sponsored


Sponsored