வெளிநாட்டுச் சி்றைகளில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள்: மத்திய அரசு தகவல்Sponsoredஏழாயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வெளிநாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நேற்றைய விவாதத்தின்போது உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் எழுத்துபூர்வமாக பதிலளித்தார். அதில் `வெளிநாடுகளில் 7,737 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக’ குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமின்றி `தண்டனைக் காலம் நிறைவடைந்த கைதிகள் நாடு திரும்புவதற்கு விமானக் கட்டணம் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படும். இதற்காக 2015-ம் ஆண்டு மார்ச் முதல் 2018-ம் ஆண்டு மார்ச் வரை 2 கோடியே 72 லட்சத்து 24 ஆயிரத்து 969 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. புள்ளி விவரங்கள் நிலவரப்படி இந்தியர்கள் 541 பேர் நேபாள சிறைகளிலும், 471 பேர் பாகிஸ்தான் சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 2017-ம் ஆண்டு 13 நாடுகளில் 56 இந்தியர்களும், நடப்பு ஆண்டில் 17 நாடுகளில் 31 இந்தியர்கள், ஜுலை 17 வரை தாக்கப்பட்டுள்ளதாக வி.கே.சிங் கூறினார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored