கார்கில் வெற்றி தினம் - தியாகத்தை நினைவுகூறும் இராணுவ வீரர்கள்!கார்கில் போர் வெற்றி தினத்தை  ஜம்மு காஷ்மீரில் இராணுவ வீரர்கள் மிகுந்த உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Sponsored


இந்தியாவின் கார்கில் பகுதிக்குள் கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் பயங்கரவாதிகள் ஊடுருவினர். இதையடுத்து கார்கில் பகுதியிலிருந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளை விரட்டியடிக்க இந்தியா தயாரானது. அந்த போர் திட்டத்துக்கு ஆப்ரேஷன் `விஜய்' என்று பெயரிடப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக கார்கில் லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடுமையான போர் நடந்தது. உயரமான மலைத்தொடர்களில் மிகுந்த சவால்களை எதிர்கொண்ட இந்த போரில் 527 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதில் 4,000க்கும் அதிகமான பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இந்த போரானது அந்த ஆண்டு மே மாதம் தொடங்கி ஜூலை வரை நடைபெற்றது.

Sponsored


இந்த போரில் இறுதியாக இந்தியா வெற்றி வாகை சூடியது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பால் பாகிஸ்தானிய படைகள் பின்வாங்கின. இந்த போரில் வீரமரணமடைந்த இராணுவ வீர்ரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில்     கார்கில் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை முன்னிட்டு பல்வேறு அணிவகுப்பு நிகழ்ச்சிகளுடன்  இராணுவ வீரர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

Sponsored
Trending Articles

Sponsored