சபரிமலை ஐயப்பன் கோயில் தொடர்பான வழக்கு! - தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு?Sponsoredசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள், அனைத்து வயதுக்கு உட்பட்ட பெண்களும் செல்வது தொடர்பாக, தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.. 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுக்கு உட்பட்ட பெண்களையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 2006-ல் வழக்கு தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த நீதிமன்றம் விளக்கம் கேட்டு திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கும், கேரள அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. கேரளாவில் மாறி மாறி உண்டான ஆட்சிகளால், இந்த விஷயத்தில் மாறுபட்ட நிலைப்பாடுகள் உருவாகின. 

Sponsored


இந்நிலையில், கோயிலுக்குள் 10 வயதுக்குக் குறைவான குழந்தைகள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த வழக்கத்தை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திராசூட், இந்து மல்கோத்ரா மற்றும் கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையில், `ஏன் அனைத்து வயதுக்கு உட்பட்ட பெண்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது. வழிபடுவது என்பது அடிப்படை உரிமை; அதைத் தடுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்து மதத்தில் இந்தத் தடை உள்ளதா' உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். 

Sponsored


இந்த வழக்கானது கடந்த 17-ம்  முதல் தொடங்கி நடைபெற்று வரும், வழக்கு விசாரணையானது இன்றுடன் (26-07-2018) நிறைவடைகிறது.  எனவே, இன்று தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Trending Articles

Sponsored