வேலை தேடிச்சென்ற தந்தை... பசியால் உயிரிழந்த குழந்தைகள்... டெல்லியில் நடந்த அதிர்ச்சிSponsoredடெல்லியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 வயதுக்கு உட்பட்ட மூன்று பெண் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பிரேதப் பரிசோதனையில் அவர்கள் பட்டினியால் உயிரிழந்திருக்கக் கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Photo Credit - Ndtv

Sponsored


கிழக்கு டெல்லியில் உள்ள மண்டவளி குடிசைப் பகுதியில் மானசி, பாரோ, சுகோ ஆகிய மூன்று குழந்தைகள் வசித்து வந்தனர். இவர்களுக்கு திடீரென கடந்த 24-ம் தேதியன்று உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. 1 மணி அளவில் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர் அருகில் உள்ளவர்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர். அதன்பின், நடந்த பிரேதப் பரிசோதனையில், `குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைவு இருந்துள்ளது. அவர்கள் பட்டினியால் உயிரிழந்திருப்பதற்கான வாய்ப்பு உள்ளது' என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.  

Sponsored


இந்தச் சம்பவத்தையடுத்து, குழந்தைகள் தங்கியிருந்த இடத்துக்கு தடயவியல் குழுவினர் ஆய்வு நடத்தினர். அங்கு, வயிற்றுப்போக்கு சிகிச்சைக்கான சில மாத்திரைகளும், சில மருந்துப் பாட்டில்களையும் குழுவினர் கைப்பற்றினர். அவை, தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக நடந்த விசாரணையில்,`மனநலம் பாதிக்கப்பட்ட தாய், குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார். தந்தை ரிக் ஷா ஓட்டி குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது ரிக் ஷா திருடு போயுள்ளது. இதனால், வறுமையில் தவித்து வந்திருக்கிறது குடும்பம். தாங்கள் குடியிருந்த பழைய இடத்தைவிட்டு நண்பரின் வீட்டில் குடியேறி உள்ளனர். வேலை தேடி வேறு இடத்துக்குச் சென்ற அவர் இன்னும் வீடு திரும்பவில்லை' என அருகில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். 

போலீஸார் கூறுகையில், `பராமரிக்க யாரும் இல்லாமல், உரிய உணவு இன்றி பசியால் குழந்தைகள் தவித்துள்ளனர். தன் குழந்தைகளுக்கு என்ன நடந்தது என்று போலீஸிடம் தெளிவுபடுத்தும் நிலையில் குழந்தைகளின் தாய் இல்லை. இரண்டாம் கட்ட பிரேதப் பரிசோதனையை மருத்துவர்கள் நடத்தி வருகிறனர். குழந்தைகளில் வயிற்றில் உணவு இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளனர். Trending Articles

Sponsored