இனி `பங்களா’தான்; மேற்கு வங்கம் இல்லை - மாநிலத்தின் பெயரை மாற்றினார் மம்தா!Sponsoredமேற்கு வங்க மாநிலத்தின் பெயரை `பங்களா' என மாற்றம் செய்து, அம்மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற பின், மாநில முன்னேற்றத்தில் தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறார் மம்தா பானர்ஜி. அதேவேளை, தேசிய அரசியலில் காலூன்றும் விதமாக பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது கூட்டணிக்கு அடித்தளமிட்டு வருகிறார். இதற்காக, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உடன் இணைந்து, மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்ற, கடந்த 2016-ம் ஆண்டு அம்மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்தன. இருப்பினும், `பங்களா' என மாற்றம்செய்து அதை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தார் மம்தா. 

Sponsored


ஆனால், மம்தாவின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. எனினும், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் அரசு, பெயர் மாற்றுவதில் தீவிரம் காட்டிவந்தது. அதன்படி, மீண்டும் மேற்குவங்கத்தின் பெயரை ஆங்கிலம், இந்தி, வங்கம் ஆகிய அனைத்து மொழிகளிலும் `பங்களா' என அழைக்கும் விதமாகப் பரிந்துரைத்து, இன்று அம்மாநில சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறகு, இத்தீர்மானம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், பெயர் மாற்றம் அரசிதழில் வெளியாகி, அதிகாரபூர்வமாக `பங்களா' என அழைக்கப்படும். 

Sponsored
Trending Articles

Sponsored