`அழகான பெண்களுக்கு மட்டுமே அனுமதி' - சர்ச்சையில் சிக்கிய மேட்ரிமோனியல் நிறுவனம்!Sponsored`அழகான பெண்களுக்கு மட்டுமே அனுமதி' என்று வெளியான பெங்களூரு மேட்ரிமோனி விளம்பரம் ஒன்று, பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சொந்த பந்தம் சகிதமாகச் சென்று பெண் பார்த்து கல்யாணம் செய்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. தற்போது, ஆன்லைனில் பெண் பார்க்கும் படலம் அதிகரித்துள்ளது. கிராமம், நகரம் எனப் பாகுபாடு இல்லாமல் அனைத்து மக்களும் இணையதளங்களில் வரன் பார்ப்பதையே தற்போது அதிகமாக விரும்புகின்றனர். இதன்விளைவாக, மேட்ரிமோனி தளங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துவிட்டன. இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த `இளம் சாதனையாளர்கள் திருமண மையம்' (young achievers’ Matrimony) என்ற அமைப்பு, நாளிதழில் நேற்று கொடுத்த விளம்பரம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Sponsored


இந்த அமைப்பு, அடுத்த மாதம் 12-ம் தேதி பெங்களூருவில் வரன் பார்க்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடுசெய்துள்ளது. அதில் பங்கேற்பவர்களுக்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது. அந்த விளம்பரத்தில், `பெரும் பணக்காரர்கள், பிரபலங்கள், விவிஐபி குடும்பங்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருப்பவர்கள், இளம் தொழிலதிபர்கள் ஆகியோருடன், ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள் மட்டுமே பங்கேற்கலாம். அவர்களுடன் அழகான பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கான கட்டணமாக, இளம் சாதனையார்களுக்கு பத்தாயிரம் ரூபாயும் விவிஐபிகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அழகான பெண்களுக்கு மட்டுமே அனுமதி என்று வெளியான விளம்பரம், சமூக வலைதளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Sponsored


இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இளம் சாதனையாளர் திருமணத் தகவல் அமைப்பின் நிர்வாகிகள், ``இதற்கு முன் நாங்கள் டாக்டர்கள் மட்டும் பங்கேற்ற சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்தினோம். அதில், பொறியியல் படித்த பெண் ஒருவர் பங்கேற்க அனுமதி கேட்டார். நாங்கள் அனுமதி மறுத்தோம். அந்தப் பெண் எங்களிடம் பேசும்போது, `அடுத்தமுறை சுயம்வரம் நடத்தும்போது, அழகான பெண்களையும் அனுமதிக்க வேண்டும். ஏனென்றால், நான் அழகிப்போட்டியில் பரிசு வென்றவர்' என்றார். இப்படிச் செய்தால் சுயம்வரம் நிகழ்ச்சிக்கு வரவேற்பு கிடைக்கும் எனத் தீர்மானித்தோம். ஆனால் தற்போது, நாங்கள் அளித்த விளம்பரம் விவாதப் பொருளாக மாறிவிட்டதால், எங்கள் நிகழ்ச்சிக்கு இனி யாரும் வரமாட்டார்கள். எனவே, அந்த சுயம்வரம் நிகழ்ச்சியை ரத்துசெய்துவிட்டோம்" என்று தெரிவித்துள்ளனர்.Trending Articles

Sponsored