சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சம் தொட்டன! 26-07-2018Sponsoredஇந்திய நிறுவனங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டதன் காரணமாக, இந்திய பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடுகளாக சென்செக்ஸும் நிஃப்டியும் இன்று புதிய உச்சத்தில் முடிவுற்றன.

நல்ல துவக்கத்திற்குப் பிறகு, வெகு நேரம் பாசிட்டிவாகப் பயணித்த பின், வர்த்தக நேரம் முடிய ஒரு மணி நேரம் இருக்கையில் சந்தை திடீரென்று ஒரு சரிவைச் சந்தித்தாலும், விரைவிலேயே சுதாரித்து லாபத்துடன் இன்றைய தினத்தை முடித்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், முதன் முறையாக 37,000 புள்ளிகள் என்ற நிலையத் தாண்டி 37,061,.62 என்ற உயரத்தைத்  தொட்டபின், 126.41 புள்ளிகள். அதாவது 0.34 சதவிகித லாபத்துடன் 36,984.64 என முடிவுற்றது.

Sponsored


Sponsored


தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 11,185.85 என்ற புதிய உச்சத்தைத் தொட்டபின் 35.30 புள்ளிகள். அதாவது 0.32 சதவிகித லாபத்துடன் 11,167.30-ல் முடிந்தது.

மாருதி சுசூகி மற்றும் யெஸ் பேங்க் உள்ளிட்ட சில நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் எதிர்பார்த்த அளவு சிறப்பாக அமையாவிடினும், டாக்டர் ரெட்டி'ஸ் லெபோரேடெரிஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களின் அறிக்கைகள் நன்கு அமைந்திருந்தது சந்தையின் முன்னேற்றத்துக்கு உதவியது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், யுரோப்பியன் யூனியன் கமிஷன் தலைவர் ஜீன் கிளாட் ஜன்கர் இவர்களின் சந்திப்பையடுத்து, ட்ரம்ப் சில புதிய வரிகளை அமல்படுத்துவதை நிறுத்த ஒப்புக்கொண்டதோடு, வர்த்தகம் பற்றிய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து நடத்த முடிவெடுத்ததும் சந்தையில் ஒரு தெளிவான மனநிலை ஏற்பட உதவியது.

இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கெதிராக சற்று முன்னேறியதும், சந்தைக்கு சாதகமாக அமைந்தது. கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக இந்திய ஆயில் நிறுவனங்களின் பங்குகள் சிறிது சரிந்தன.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :
ஸ்டேட் பேங்க் 5.6%
ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் 4.1%
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 4%
கிரைம் இண்டஸ்ட்ரீஸ் 3.85%
எய்ச்சேர் மோட்டார்ஸ் 3.4%
அல்ட்ராடெக் சிமென்ட் 2.4%
டாக்டர் ரெட்டி'ஸ் 2.2%
ஓ.என்.ஜி.சி  2%
ஆக்ஸிஸ் பேங்க் 1.85%
வெல்ஸ்பன் கார்ப் 13.8%
ஜே&கே பேங்க் 9.8%
ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் 9.8%
REC 9.2%
விஜயா பேங்க் 8.6%
பேங்க் ஆஃப் இந்தியா 8.5%
ப்ரிஸ்ம் சிமென்ட் 8%
கனரா பேங்க் 7.7%


விலை சரிந்த பங்குகள் :

மாருதி சுசூகி 3.7%
யெஸ் பேங்க் 3.6%
இந்தியன் ஆயில் 2.6%
பாரத் பெட்ரோலியம் 1.7%
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 1.6%

இன்று, மும்பை பங்குச் சந்தையில் 1354 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1217 பங்குகள் விலை சரிந்தும், 140 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.Trending Articles

Sponsored