`திரும்பவும் உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி!' - புதினிடம் நெகிழ்ந்த மோடிSponsoredபிரிக்ஸ் மாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திந்த மோடி, 'மீண்டும் உங்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி' என்று கூறியுள்ளார்.  

தென்னாப்பிரிக்காவில், பிரிக்ஸ் கூட்டமைப்பின் 10-வது உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. மூன்று நாள்கள் நடைபெறும் இம்மாநாட்டில், பிரதமர் மோடி உட்பட சீனா, ரஷ்யா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் அதிபர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், ஒரு பகுதியாக பிரிக்ஸ் கூட்டமைப்பு நாட்டின் தலைவர்கள் அனைவரும் கலந்துரையாடினார்கள். அப்போது, பேசிய பிரதமர் மோடி, `இந்தியாவில் தொழில் மற்றும் உற்பத்தித் திறன் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. கூட்டமைப்பு நாடுகளுடன் இணைந்து தொழில் புரட்சியை ஏற்படுத்த இந்தியா மிகுந்த ஆர்வமாக உள்ளது' என்று பேசினார்.  

Sponsored


அதன்பிறகு, ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினை தனியாகச் சந்தித்த மோடி, `மீண்டும், உங்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. சோச்சியில் நாம் சந்தித்து உரையாடியது எப்போதும் என் நினைவில் இருக்கும். இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான நட்பு மிகவும் நெருக்கமாக உள்ளது என்று எடுத்துக்காட்டுகிறது. இரு நாட்டு உறவுகள் மேலும் வலுப்படும்' என நெகிழ்ந்துள்ளார். இதற்கிடையில், அனைத்து நாட்டு அதிபர்களையும் தனித்தனியே சந்தித்துப் பேசியுள்ளார் பிரதமர்.

Sponsored
Trending Articles

Sponsored