மோடியிடம் வாங்கிய ஆட்டோகிராப்! - பெண்ணுக்குக் குவிகிறது திருமண வரன்கள்Sponsoredபிரதமர் மோடியிடம் ஆட்டோகிராப் வாங்கிய பெண்ணுக்கு திருமண வரன்கள் குவித்து வருகிறது. 'கடந்த 10 நாளில் மட்டும் 2 வரன்கள்' வந்துள்ளதாக அப்பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 16-ம் தேதி நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது, மோடி பேசிக் கொண்டிருக்கையில்,  திடீரென கூடாரம் சரிந்து விழுந்தது. கூடாரத்தின் கீழ் அமர்ந்திருந்த பலர் விபத்தில் சிக்கிக்கொண்டனர். உடனடியாக அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால், தன் உரையைப் பாதியில் முடித்துக்கொண்ட பிரதமர், சிகிச்சைப் பெற்றவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, ரிதா என்ற கல்லூரி மாணவியிடம் நலம் விசாரிக்கச் சென்றார் பிரதமர். அவரிடம், ஆட்டோகிராப் வேண்டும் என ரிதா கேட்க, அவரின் விருப்பத்தை நிறைவேற்றினார் மோடி. 

Sponsored


Sponsored


இதையடுத்து, `தன் மகளுக்கு இரண்டு திருமண வரன்கள் வந்துள்ளன' என ரிதாவின் தாயார் சந்தியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், `பிரதமரிடம் ஆட்டோகிராப் வாங்கியதையடுத்து, அனைவரும் எங்களை நலம் விசாரித்தனர். கடந்த 10 நாள்களில் மட்டும் பங்குரா மற்றும் ஜார்க்கண்டிலிருந்து 2 வரன்கள் வந்துள்ளன. மகள் படித்துக்கொண்டிருப்பதால் இதில், பெரிதாக ஆர்வம் காட்டவில்லை' என்று சொன்னவர், இதற்குமுன் ஒரு வரன் வந்ததாகவும், அவர்கள் வரதட்சனையாக 1,00,000 ரூபாய் கேட்டுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

Photo Credit -tweet/@Drsubhassarkar

இதுகுறித்து ரிதா கூறுகையில், `என்னிடம் நலம் விசாரித்த பிரதமரிடம் மிகுந்த தயக்கத்துடன் ஆட்டோகிராப் கேட்டேன். உடனடியாக, பிரதமர் `நலமாக இருங்க ரிதா' என்று எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்தார். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படம் செய்தித்தாள்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதன்பிறகு, எங்களிடம் பேசாதவர்கள்கூட எங்கள் வீட்டுக்கு வந்து நலம் விசாரித்துச் சென்றனர். திருமணம் குறித்துப் பெற்றோர்தான் முடிவு எடுப்பார்கள்' என்றார்.Trending Articles

Sponsored