பேச்சுவார்த்தையில் உடன்பாடு - 8 நாள்களுக்குப் பின் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்!



Sponsored



பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 8 நாள்களாக நடைபெற்ற லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் கடந்த 20-ம் தேதி முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. இந்தப் போராட்டத்தில் தமிழகத்திலிருந்து 4  லட்சத்துக்கும் அதிகமான லாரிகளும் நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகளும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றன.

Sponsored


Sponsored


Photo Credit:ANI

அதனால், அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் மற்றும் வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இந்தநிலையில், இன்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை செயலாளர் ஒய்.எஸ்.மாலிக் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் அமைப்பினர் கலந்துகொண்டனர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் இரு தரப்புக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது. அதையடுத்து, 8 நாள்களாகத் தொடர்ந்து வந்த லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தெரிவித்த மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை செயலாளர் ஒய்.எஸ்.மாலிக், 'பொருளாதாரத்தைப் பாதுகாப்பதில் அவர்களுக்கும் பங்கு உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரச்னையை விரைவில் தீர்ப்பதற்கு எங்களால் முடிந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர ஒப்புக்கொண்ட லாரி உரிமையாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார். 



Trending Articles

Sponsored