சிகரெட் அட்டை போன்று கங்கை நதிக்கும் எச்சரிக்கை ஸ்டிக்கர் தேவை!சிகரெட் அட்டையில் இருப்பது போன்ற எச்சரிக்கை வாசகங்கள் கங்கை நதிக்கு இல்லாதது ஏன்? எனப் பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. 

Sponsored


கங்கை நதி முற்றிலும் மாசடைந்துள்ளது தொடர்பான விவகாரம் நேற்று டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே கோயல் அடங்கிய அமர்வு கங்கை நதியைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் கூறப்பட்டது. பின்னர் பேசிய நீதிபதிகள், உத்தரபிரதேசம் மாநிலம், ஹரிதுவாரில் இருந்து உன்னாவ் வரை செல்லும் கங்கை நதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கங்கையைக் கடவுளாக நினைக்கும் சில அப்பாவி மக்கள் அதில் குளித்துவிட்டு நீரைக் குடிக்கவும் செய்கின்றனர். இது மனிதர்களுக்கு மிகவும் தீங்கு விளைக்கும் எனக் கூறினர்.

Sponsored


தொடர்ந்து, சிகரெட் அட்டையில் இருக்கும் எச்சரிக்கை வாசங்களைப் போன்று கங்கை நதிக்கரையிலும் ஏன் வாசகங்கள் அமைக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பினார். பின்னர், கங்கை நதி குடிப்பதுக்கு உகந்ததல்ல என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளைக் கங்கை நதியில் 100 மீட்டர் இடைவெளியில் வைக்க வேண்டும் எனத் தேசிய கங்கைத் தூய்மை இயக்கத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கங்கை நதியில் எங்கெல்லாம் தண்ணீர் சிறந்த முறையில் உள்ளது, குடிப்பதற்கு ஏற்றது என்பதை ஆய்வு செய்து அந்த வரைப்படத்தை இரண்டு வாரங்களுக்குள் தேசிய கங்கைத் தூய்மை இயக்கமும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் தங்களது இணையதள பக்கத்தில் வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். 

Sponsored
Trending Articles

Sponsored