கால் நூற்றாண்டுக்குப் பிறகு நிரம்பிய இடுக்கி அணை!Sponsoredசியாவின் ஒரே ஆர்ச் அணைக்கட்டான இடுக்கி அணை முழுக் கொள்ளவை நெருங்குகிறது. இதைத் தொடர்ந்து, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் இந்தப் பிரம்மாண்ட அணைக்கட்டு மீண்டும்  திறக்கப்படவுள்ளது. 

கேரளாவில் பெய்த கன மழையால், இடுக்கி அணையில் தற்போது 2,392 அடி உயரத்துக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. அணையின் முழுக் கொள்ளவு 2,403 அடி ஆகும். இதில், 2,400 அடியைத் தொட்டதும் தண்ணீர் திறந்துவிடப்படும்.  இன்று அல்லது நாளை, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அணை திறக்கப்பட்டால், எடுக்கவேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு நேற்று விவாதித்தது.தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை விரைவாக அப்புறப்படுத்தும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

Sponsored


இதற்கு முன்னதாக, 1992-ம் ஆண்டுதான் இந்த  அணை முழுக் கொள்ளவை எட்டியது .அணையில் தண்ணீர் திறக்கப்படும்போது செயற்கைக்கோள் உதவியுடன் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இடுக்கி அணையில், செருதோனி பகுதியில் உள்ள 5 மதகுகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், பெரியாற்றில் பாய்ந்து ஓடும். தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக மலைகள் நிறைந்த இடுக்கி மாவட்டத்துக்கு மட்டும் 192.3 செ.மீ மழை கிடைத்துள்ளது. இது, வழக்கத்தைவிட 49 சதவிகிதம் அதிகம். 

Sponsored
Trending Articles

Sponsored