மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து... 500 அடி பள்ளத்தில் விழுந்து 30 பேர் உயிரிழப்பு!Sponsoredமும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மாணவர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 


 

மகாராஷ்டிரா மாநிலம், ராய்கர்ட் மாவட்டத்தில், அம்பெனெலி என்னும் இடத்தில் உள்ள மலைப் பாதையில்தான் இந்தக் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. டாபோலி வேளான் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் 35 பேர் பேருந்தில் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் சென்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சுமார் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து நேரிட்டுள்ளது. பேருந்து புறப்படுவதற்கு முன்னர், பல்கலைக்கழக ஊழியர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது...

Sponsored


 

Sponsored


விபத்து குறித்து வருத்தம் தெரிவித்து பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். Trending Articles

Sponsored