உண்மைத் துப்பாக்கி என்று நம்பாத பெண்ணை சுட்டுக் கொன்றவர் கைது..!Sponsoredடெல்லியில் ஒருவர், தான் வைத்திருப்பது உண்மையான துப்பாக்கி என்பதை நிரூபிக்க, பெண் ஒருவரை சுட்டுள்ளார். அதில், அந்தப் பெண் உயிரிழந்தார். 

டெல்லி, திமார்பூர் பகுதியைச் சேர்ந்த சன்னி என்பவரைக் காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தினர். காவல்துறை விசாரணையில், 'கடந்த சில தினங்களுக்கு முன்னர் சன்னி என்பவர் உஷா என்பவரது வீட்டில் இருந்துள்ளார். அப்போது, நிஷ்டி என்ற பெண், உஷாவை சந்திக்க வந்துள்ளார். அப்போது, சன்னியிடம் துப்பாக்கி ஒன்று இருந்துள்ளது. அதை, உண்மையான துப்பாக்கி என்று நம்ப மறுத்துள்ளார் நிஷ்டி.

Sponsored


உண்மையான துப்பாக்கி என்று நிரூபிப்பதற்காக, சுட்டுக் காண்பித்துள்ளார். துப்பாக்கி வெடித்து, குண்டு நிஷ்டியின் வயிற்றில் புகுந்தது. உடனே, அவர்கள் நிஷ்டியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில், நிஷ்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்' என்பது தெரியவந்தது. இறந்துபோன நிஷ்டி, உஷாவுக்குத் தெரிந்தவர். எனவே, உஷாவிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். 

Sponsored
Trending Articles

Sponsored