மாஸ்கோ, வாஷிங்டன் நகரங்களுக்கு இணையான பாதுகாப்பு வசதி பெறும் டெல்லி!Sponsoredரஷ்யத் தலைநகர் மாஸ்கோ, அமெரிக்காவின் வாஷிங்டன் ஆகிய நகரங்களைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் ஏவுகணைத் தாக்குதல் தடுப்பு அமைக்கப்பட உள்ளது. இதற்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாதுகாப்புக் கொள்முதல் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 

விமானம், ஏவுகணை மற்றும் ட்ரோன் ஆகியவற்றின் மூலம் தலைநகர் டெல்லி, மும்பை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் வான்வழித் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டும் பயங்கரவாதிகளைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் முனைப்புக் காட்டி வருகிறது ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (DRDO). இதற்காக, பூமியின் மேற்பரப்பு அல்லது விண்வெளியில் இருந்து தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் வகையில் இரண்டு அடுக்குகளைக் கொண்ட பி.எம்.டி (ballistic missile defence) அமைப்பை டி.ஆர்.டி.ஓ வடிவமைத்து வருகிறது. இந்தநிலையில், National Advanced Surface to Air Missile System-II என்ற தாக்குதல் தடுப்பு அமைப்பை டெல்லியில் அமைக்கப் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவிடம் இருந்து 1 பில்லியன் டாலர் செலவில் இந்த அமைப்பை இந்தியா வாங்க இருக்கிறது. 

Sponsored


இதன் மூலம், டெல்லி நகரின் வான்பரப்பில் ஏவுகணைகள் அல்லது விமானங்கள் வருவதை ரேடார் உதவியால் கண்டறிந்து அதனைத் தடுக்க முடியும். அவற்றைக் குறிவைத்து தாக்கி அழிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம் மற்றும் பிற முக்கிய இடங்களில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மேலும் பாதுகாப்பை வலுப்படுத்த ஏவுகணைத் தாக்குதல் தடுப்பு அமைப்பை மத்திய அரசு அமைக்கிறது. முன்னதாக, அமெரிக்காவின் வாஷிங்டன், ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ மற்றும் இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் இதேபோன்ற ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

Sponsored
Trending Articles

Sponsored