`தொழிலதிபர்களை கொள்ளையர்கள் என அவமானப்படுத்துவதா?' - பிரதமர் மோடிதொழிலதிபர்களுக்கு ஆதரவு கொடுப்பதில் எனக்கு ஒன்றும் தயக்கமில்லை, எனது நோக்கம் தூய்மையாக உள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Sponsored


Photo Credit: ANI

Sponsored


உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, தொழிலதிபர்களுக்கு ஆதரவு கொடுப்பதில் எனக்கு ஒன்றும் தயக்கமில்லை, எனது நோக்கம் தூய்மையாக உள்ளது.  தொழிலதிபர்கள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களை கொள்ளையர்கள் என அவமானப்படுத்த வேண்டுமா?. சிலர் தொழிலதிபர்களை பொதுவெளியில் சந்திக்காமல் திரைமறைவில் சந்திக்கின்றனர். அவர்கள் தான் அச்சப்பட வேண்டும். தொழிலதிபர்களுடன் இருப்பதில் எனக்கு ஒன்றும் அச்சமில்லை. தவறுசெய்பவர்கள் யாராக இருந்தாலும் நாட்டை விட்டுச்செல்ல வேண்டும் அல்லது சிறைகளில் தண்டனை அனுபவிக்க வேண்டும். இதற்கு முன்பு இவ்வாறு நடக்கவில்லை.ஏனென்றால் அப்போது அனைத்தும் திரைமறைவில் நடைப்பெற்றது. தப்பிச் சென்றவர்கள் எல்லாம் யாருடைய விமானத்தில் சென்றார்கள் என்பதை அறிவீர்கள் தானே. நான் தவறு செய்துவிட்டதாக கூறுபவர்கள் கடந்த 70 ஆண்டுகளாக என்னென்ன தவறுகள் செய்தார்கள் என்பதை பார்க்க வேண்டும். நான் 4 ஆண்டுகள் தான் நீங்கள் 70 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்கள்” என்றார்.

Sponsored


மேலும், உத்தரப்பிரதேச மாநில தொழிலதிபர்களின் நம்பிக்கை பெற்றுள்ளது.முதலீடுகளை ஈர்த்துள்ள மாநில முதலமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.Trending Articles

Sponsored