விண்ணப்பித்தது 3.29 கோடி பேர்; பட்டியலில் இருப்பது 2.89 கோடி பேர்!- அச்சப்பட வேண்டாம் என அஸ்ஸாம் முதல்வர் வேண்டுகோள்Sponsoredஅஸ்ஸாமில், தேசியக் குடிமக்கள் பதிவு வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 3.29 கோடி மக்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 2.89 கோடி மக்கள் மட்டுமே பட்டியலில் உள்ளனர். இதனால், 40 லட்சம் மக்கள் அசாமை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Photo Credit -NDtv

Sponsored


கடந்த பல ஆண்டுகளாக வங்கதேசத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அஸ்ஸாம் மாநிலத்தில் சட்ட விரோதமாகக் குடியேறியுள்ளனர். இதனால், உன்மையான குடிமக்கள் யார் என அடையாளம் காண்பது கடினமாக இருந்தது. இதையடுத்து, இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த மாநிலத்தில் மட்டும்தான் `தேசியக் குடிமகன் பதிவு' பட்டியல் தயாரிக்கப்பட்டது. கடந்த 1951-ம் ஆண்டிலிருந்து பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், அஸ்ஸாமில், சட்ட விரோதமாகக் குடியேற்றம் நடப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2013-ல் மீண்டும் தேசியக் குடிமகன் பதிவுப் பட்டியலைத் தயாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு முதல் தேசியக் குடிமகன் பதிவு அறிக்கையை வெளியிட்டது. குடிமகன் பட்டியலில் சேர்க்க 2.29 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 1.90 கோடி பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இந்தப் பட்டியல்களைத் தயாரிக்கும் பணியை தேசிய குடிமக்கள் பதிவேடு அலுவலகம் செய்து வந்தது. 

Sponsored


இந்நிலையில், குடிமக்கள் பதிவின் இறுதிப்பட்டியல் வெளியிட முடிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சார்பானந்தா சோனோவால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். அஸ்ஸாம் வரலாற்றின் மிக முக்கிய தருணமாக கருதப்படும் இந்த நிகழ்வால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், வன்முறைகளைத் தூண்டக்கூடிய எந்தவொரு வதந்திகளையும் மக்கள் நம்ப வேண்டாம் என அம்மாநில முதல்வர் கேட்டுக்கொண்டிருந்தார். 

இந்நிலையில், இன்று காலை 2-வது வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டது. குடிமக்கள் பட்டியலில் சேர்க்கும்படி 3.29 கோடி மக்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், 2.89 கோடி மக்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதனால், 40 லட்சம் மக்கள் அஸ்ஸாமை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். `இது இறுதிப் பட்டியல் இல்லை; மக்கள் இதுகுறித்து அச்சப்படத் தேவை இல்லை. பட்டியலில் இடம் பெறாதவர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள். இறுதிப் பட்டியலில் விடுபட்டவர்களுக்கு மட்டும் தனிப்பட்ட கடிதம் வழங்கப்படும்' என  தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும் இறுதிப் பட்டியல் வெளியாகாததால் விண்ணப்பித்திருந்த பல லட்சக்கணக்கான மக்கள், பட்டியலில் தங்களின் பெயர் இடம்பெறுமா என்ற ஆவலில் இருந்தனர். Trending Articles

Sponsored