`ராகுலுக்கு நல்ல மனைவி கிடைக்க வேண்டும்’ - பெண் சாமியாரின் பிரார்த்தனைSponsored'ராகுல் காந்திக்கு நல்ல மனைவி கிடைக்க வேண்டும்' என பெண் சாமியார் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள கோரக்நாத் கோயிலுக்கு பெண் சாமியார் சாத்வி பிராச்சி நேற்று வருகைதந்தார். பிரார்த்தனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம், நான் எப்போதும் இந்தக் கோயிலுக்கு வந்து பாபா கோரக் நாத்திடன் ஆசிபெறுவது வழக்கம்.  ஆனால், இம்முறை ஒரு சிறப்புப் பிரார்த்தனைக்காக வந்துள்ளேன். மத்தியில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, ராகுலுக்கு ஒரு நல்ல மனைவி கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்க வந்ததாகக் கூறினார். சாத்வி பிராச்சியின் இந்தப் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Sponsoredஇதுகுறித்துப் பேசிய உத்தரப்பிரதேச  காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அசோக் சிங், “ காங்கிரஸில் உள்ள மூத்த தலைவர்களைப் பற்றி ஏதாவது கூறுவதே இவர்களின் ட்ரெண்டாக உள்ளது. அவர், தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்காக இப்படி அற்பமாகப் பேசிவருகிறார். சாத்வியின் இதுபோன்ற கருத்துகள் அருவருக்கத்தக்க வகையில் உள்ளது” என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored