கோயிலுக்குச் சென்ற பா.ஜ.க எம்.எல்.ஏ - கங்கை நீரால் சுத்தம்செய்யப்பட்ட கோயில்Sponsoredஉத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ சென்றதால், அந்தக் கோயில் முழுவதும் கங்கை நீரால் சுத்தம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேசம் மாநிலம், ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள முத்குரா குட் என்ற கிராமத்தில், பழைமைவாய்ந்த கோயில் ஒன்று அமைந்துள்ளது. மகாபாரத காலம்தொட்டு இந்தக் கோயில் இருந்து வருவதாக அந்தக் கிராம மக்கள் நம்புகின்றனர். அது மிகவும் சக்தி வாய்ந்த கோயில் என்றும், அங்கு பெண்களுக்கு அனுமதி இல்லை எனவும் கூறப்படுகிறது. பெண்கள் வெளியில் நின்று மட்டுமே பிரார்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும்.

Sponsored


இந்நிலையில், மனிஷா அனுராகி என்ற பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ ஒருவர், சில தினங்களுக்கு முன்னர் அந்தக் கோயிலுக்கு வருகை தந்துள்ளார். அவர் உள்ளே வரும்போது யாரும் எதுவும் கூறவில்லை. அவர் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பிய பின்பு, கோயில் முழுவதும் கங்கை நீரால் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. 

Sponsored


இதுகுறித்துப் பேசிய கோயில் பூசாரி, ‘மனிஷா நுராகி, கோயிலுக்கு வரும்போது நான் இல்லை. அந்தச் சமயம் நான் இங்கு இருந்திருந்தால் அவரை கோயிலுக்குள் அனுமதித்திருக்க மாட்டேன். இந்தக் கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப் படமாட்டார்கள். அது தெரியாமல் மனிஷா வந்து சென்றதால்தான் கோயிலை சுத்தம்செய்தோம்’ எனத் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, கோயில் சுத்தம்செய்யப்பட்டது தொடர்பாக மனிஷா பேசும்போது, ‘அந்தக் கோயிலினுள் பெண்கள் செல்லக் கூடாது என்ற விஷயம் எதுவும் எனக்குத் தெரியாது. இது பெண்களை அவமதிக்கும் செயல்' எனக் கூறினார். Trending Articles

Sponsored