`நான் என்ன பேச வேண்டும், உங்கள் கருத்து வேண்டும்' - மக்களிடம் கேட்கும் மோடி ``சுதந்திர தினத்தன்றுதான்  எதைப்பற்றி உரையாற்ற வேண்டும்'' என்று மக்களிடம் கருத்து கேட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.


 

Sponsored


நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின உரை குறித்து மக்களிடம் கருத்து கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இம்முறையும் ட்விட்டரில் மக்களிடம் கருத்து கேட்டுள்ளார். `சுதந்திர தினத்தன்று நான் எதைப் பற்றி உரையாற்ற வேண்டும்? உங்களின் கருத்து என்ன? உங்களின் யோசனைகளை நரேந்திர மோடி செயலி (Narendra Modi App) அல்லது MyGov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுங்கள். உங்களிடம் இருந்து பயனுள்ள யோசனைகளை எதிர்பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

கடந்த ஆண்டு சுதந்திர தினவிழாவன்று பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, சுதந்திர தின உரையாற்றினார். காஷ்மீர் பிரச்னை, கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் இறந்த விவகாரம், முத்தலாக் முறை, பசு வதை சர்ச்சைகள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து உரையாற்றினார். அதேபோன்று இந்த ஆண்டு எதைப்பற்றியெல்லாம் பேச வேண்டும்? என்று மக்களிடம் மோடி கருத்து கேட்டுள்ளார். மோடியின் சுதந்திர தின உரையில் எந்தெந்த பிரச்னைகள் குறித்து விவரிக்க வேண்டும் என்பதை mygov.in இல் பதிவு செய்யலாம். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored