அஸ்ஸாம் விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! - ராகுல் காந்தி கோரிக்கைSponsoredதேசிய குடிமக்கள் பதிவில் பெரும்பாலானவர்கள் பெயர்கள் விடுபட்டிருப்பதன் காரணமாக அஸ்ஸாம் மாநிலத்தில் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. அந்தப் பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

அஸ்ஸாம் மாநிலத்தில் வங்காளதேசத்தைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் வசித்துவருகின்றனர். அங்கு உண்மையான அஸ்ஸாம் மக்கள் யார்? வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் யார் என்பதை கணக்கிடும் பணி காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. அதற்கான இறுதிப் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதில், 50 லட்சத்துக்கும் அதிகமான அஸ்ஸாம் மக்களின் பெயர் விடுபட்டுள்ளது. இதனால், அஸ்ஸாமில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

Sponsored


இந்த விவகாரம் தொடர்பான ராகுல் காந்தியின் ஃபேஸ்புக் பதிவில், ``தேசிய குடிமக்கள் பதிவு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, மன்மோகன் சிங்கால் தொடங்கப்பட்டது. பின்னர், மத்தியிலும், அஸ்ஸாம் மாநிலத்திலும் பா.ஜ.க அரசு அந்தப் பணியைத் தொடர்ந்தது. அஸ்ஸாம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலுள்ளவர்களின் பெரும்பாலானவர்களின் பெயர்கள், தேசிய குடிமக்கள் பதிவில் விடுபட்டுள்ளதால் அம்மாநிலத்தில் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. 1,200 கோடி ரூபாய் செலவில் செய்துமுடிக்கப்பட்டுள்ள இந்தப் பணி மெத்தனமாக நடைபெற்றுள்ளது. இந்தப் பிரச்னையை அரசு, விரைவாக தீர்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், அமைதியை நிலைநாட்ட உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தேசிய குடிமக்கள் பதிவில் யாருக்கெல்லாம் அநீதி நிகழ்ந்துள்ளதோ, அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் எந்த மொழியை, மதத்தை, இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பிரச்னையில்லை அவர்களுக்கு உதவுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored