``பெண்ணுறுப்புச் சிதைவு போஸ்கோ சட்டத்தின் கீழ் வரும்!'' - சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் கருத்துSponsored`பொண்ணுங்களுக்கு அந்த உணர்வு கொஞ்சம் ஜாஸ்தி' என்கிற அறிவற்ற ஆணாதிக்கத்தின் ஒரு வடிகாலாகவே, பெண்ணுறுப்பு சிதைவு உலகின் பல நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. ஒரு பெண் குழந்தைப் பருவம் அடைவதற்கு முன்பே அப்பெண்ணின் தாய் அல்லது அதற்கென்று இருக்கும் மருத்துவச்சி மூலம் இந்தக் கொடூரம் நிகழ்த்தப்படுகிறது. கத்தி, பிளேடு அல்லது உடைந்த கண்ணாடித் துண்டுகளால், பெண்ணுறுப்பில் பாலியல் ஆசையைத் தூண்டுவதாக அவர்கள் நம்பும் பகுதிகளை கரகரவென அறுத்து எறிந்து, மற்ற பாகத்தில் சிறு துளை மட்டும் மிச்சம்விட்டு இறுகத் தைத்துவிடுகிறார்கள். ரத்தம் வடிய வடியக் கிடக்கும் அந்தச் சிறுமி, பிழைப்பதும் இறப்பதும் அவள் தலையெழுத்து. இதில் பிழைத்துக்கொண்டாலும், ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும், பெரியவளாகி மாதவிடாய் நிகழும்போதும் வலியில் செத்து செத்துப் பிழைக்க வேண்டும். இத்தனை வலிகளையும் தாண்டி திருமணம் நடக்கும். கணவன் தையலைப் பிரித்து, `என் மனைவி ஒழுக்கமானவள்' என்று நற்சான்றிதழ் தருவான். `என் மகளை நான் எவ்வளவு ஒழுக்கமா வளர்த்திருக்கேன்' என்று மகளைப் பெற்ற அம்மா ஆனந்தக் கண்ணீர் விடுவார்.

பெண்ணுடலின் மீதான தங்கள் ஆதிக்கத்தை, பெண்களை வைத்தே பல காலமாக ஆண்கள் சாதித்து வருகிறார்கள். அதற்கான மிகக் கொடூரமான உதாரணம், இந்தப் பெண்ணுறுப்பு சிதைப்பு. காலம் எப்போதும் ஒரு பக்கமே சுழலுமா? ஒரு கட்டத்துக்கு மேல் வலியையும் வேதனையையும் சகித்துக்கொள்ள முடியாத அம்மாக்கள், தங்கள் மகள்களையாவது இந்தச் சிதைப்பிலிருந்து காப்பாற்ற குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். அதன் தொடர்ச்சியாக, வழக்கறிஞர் சுனிதா திவாரி, சில மதங்களில் இருக்கும் பெண்ணுறுப்பு சிதைப்பு நடைமுறையை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் தீபக் மிஸ்ரா, ``இந்த வழக்கம் அதிகமாக இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளிலேயே தடை செய்யப்பட்டுவிட்டது'' எனக் குறிப்பிட்டார்கள். 

Sponsored


``மகாராஷ்டிராவில் உள்ள டவோடி போரா (Dawoodi Bohra) இனத்தில் இருக்கும் இந்தப் பழக்கம், இந்தியக் குற்றவியல் சட்டப்படியும், பெண்ணுறுப்பு சிதைப்பு சிறுமிகளுக்குச் செய்யப்படுவதால், சிறார் பாலியல் குற்றங்கள் தடை சட்டமான போஸ்கோவின் கீழும் இது குற்றம்தான். இந்தப் பழக்கத்தை ஓர் இனத்தின் மீது செய்யப்படுவதாக நான் நினைக்கவில்லை. இது, பெண்கள் மீது மட்டுமே செய்யப்படுகிறது. கணவர்களின் கட்டுப்பாட்டில் பெண்களை வைப்பதற்காகக் கொண்டு வரப்பட்டதா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார் நீதிபதி மிஸ்ரா.

Sponsored


நீதிபதி சந்திர சூட், ``மதத்தின் பெயரால் பெண்ணுறுப்பைச் சிதைப்பதா? பெண்களின் உடலை எப்படி மத அடையாளத்துக்கு உட்படுத்த முடியும்? குற்றமாகச் சொல்லப்பட்ட ஒரு விஷயத்தை, ஒரு பெண் கட்டாயம் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்வதும் குற்றம்தான்'' என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியுள்ளார். 

இந்த வழக்கு தொடர்பாகப் பேசிய மூத்த உளவியல் ஆலோசகர்கள், ``ஒரு மருத்துவரே, மருத்துவக் காரணங்கள் தவிர்த்து, ஒரு பெண்ணின் மறைவிடத்தைத் தொடுவது குற்றம். ஆண்களுக்குச் சுன்னத் செய்யப்படுவது போலத்தான் இந்த வழக்கமும் என ஏற்றுக்கொள்ள முடியாது. அதில், ஆண்களுக்குச் சில ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால், பெண்ணுறுப்பு சிதைப்பு என்பது, பெண்களுக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்துகிறது. பெண்ணுறுப்பை முழுவதும் வெட்டுவதில்லை. சிறு பகுதியை மட்டும்தான் வெட்டுகிறோம் என மத ஆதரவாளர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று குமுறுகிறார்கள்.Trending Articles

Sponsored