உலகக்கோப்பை மகளிர் ஹாக்கியில் காலிறுதியில் நுழைந்தது இந்தியா!Sponsoredஇங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை மகளிர் ஹாக்கியில் "பி" பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, ப்ளே ஆப் சுற்றில் இத்தாலியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் 3 - 0 என்ற கோல்கணக்கில் இத்தாலியை அதிரடியாக வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இந்தியா! 

காலிறுதிக்குள் நுழைவதற்கான நாக் அவுட் ஆட்டமான இன்று தொடக்கம் முதலே மிகவும் ஆக்ரோஷத்துடன் இந்திய அணி விளையாடியது. பந்து பெரும்பாலும் இந்திய வீராங்கனைகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அதன் பலனாக ஆட்டத்தின் ஒன்பதாவது நிமிடத்தில் இந்தியாவின் லல்ரெம்சியாமி முதல் கோலை அடித்தார். அடுத்ததாக ஆட்டத்தின் 45ஆவது நிமிடத்தில் இந்தியாவின் வந்தனா கட்டாரியா இந்தியாவுக்கான இரண்டாவது கோலை அடித்தார். இந்தியா 2 - 0 என்ற முன்னிலை பெற்றது. அடுத்ததாக, ஆட்டத்தின் 54ஆவது நிமிடத்தில் அதே வந்தனா கட்டாரியா இன்னொரு கோலை அடித்து, இந்தியாவின் கோல் எண்ணிக்கையை மூன்றாக உயர்த்தினார். இறுதியில் 3 - 0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வென்று காலிறுதிக்குத் தகுதிபெற்றது இந்தியா. இத்தாலியால் ஒரு கோல்கூட திருப்ப இயலவில்லை. 

Sponsored


வரும் வியாழனன்று காலிறுதி ஆட்டத்தில் அயர்லாந்து அணியை இந்தியா சந்திக்கவுள்ளது. ஏற்கனவே அயர்லாந்து அணியிடம் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுத்து அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறுமா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது!

Sponsored
Trending Articles

Sponsored