நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் சி.பி.எம் - பிரசாரத்துக்கு ஊழியர்கள் நியமனம்!Sponsored2019-ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரப் பணிக்காக, கேரள மாநிலத்தில் 3843 முழுநேர ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, மாதம் தலா ரூ.7,500 படி வழங்கப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக, ஆளும் பா.ஜ.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தயாராகிவருகின்றன. கேரள மாநிலத்தில் ஆளும் சி.பி.எம் கட்சி சார்பில், பாராளுமன்றத் தேர்தலுக்காக 3843 முழுநேர ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சூரில் நடந்த மாநில மாநாட்டில், இதுகுறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2193 கிளை கமிட்டிகளின் செயலாளர்கள் மற்றும் 206 ஏரியாக்களில் பெண்கள் என மொத்தம் 3843 பேர் முழுநேர ஊழியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவருக்கும் மாதம் 7,500 ரூபாய் வீதம் படி வழங்கப்பட உள்ளது.

Sponsored


முழுநேர ஊழியர்களுக்கு வழங்கும் தொகையை மாவட்டக் குழுவினர் வசூல் செய்ய வேண்டும் எனவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்காக, மாதம் 2,88,22,500 ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகும், முழுநேர ஊழியரின் பணி தொடரும் எனக் கூறப்படுகிறது. சிறையில் இருக்கும் சி.பி.எம் கட்சிப் பிரமுகர்களைச் சந்திக்க வேண்டும். மேலும், அவர்களின் குடும்பத்தினரைக் கவனிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல அசைன்மென்ட்டுகள் முழுநேர ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

Sponsored
Trending Articles

Sponsored