பிரதமர் திறந்தவைத்த சாலையில் இரண்டே மாதத்தில் விரிசல் - இது டெல்லி பசுமைவழிச் சாலை அவலம்!ரூபாய் 11 ஆயிரம் கோடி செலவில், டெல்லி டு மீரட் இடையே உலகத் தரத்தில் அதிநவீன நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. திறக்கப்பட்ட இரண்டே மாதத்தில் இச்சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

Sponsored


photo credit: the wire

Sponsored
முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கப்படும் இச்சாலையில், உள்ளே செல்லும் வழியும் வெளியேறும் வழியும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும்,சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகள் மற்றும் ஒவ்வோர் ஐந்நூறுமீட்டர் தூரத்துக்கும்  மழைநீர் சேகரிப்பு வசதி, வாகனங்களின் எடையைச் சோதிக்கும் சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, வாகனங்களின் வேகத்தை கேமரா மூலம் கணக்கிட்டு, அதிவேகமாகச் செல்பவர்களுக்கு அபராத ரசீது வழங்கப்படும். சாலையில் பயணிக்கும் தூரத்துக்கு மட்டும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் வசதியும் உள்ளது. இது, நாட்டின் முதல் ஸ்மார்ட் மற்றும் பசுமைவழிச் சாலை என அழைக்கப்பட்டது. உலகத் தரத்தில் இந்த அதிநவீன நெடுஞ்சாலையைக் கடந்த மே மாதம் 27-ம் தேதி, பிரதமர் மோடி திறந்துவைத்தார். அப்போது இந்தச் சாலையில், திறந்த வாகனத்தில் சுமார் 10 கி.மீ. வரை பிரதமர் மோடி பயணம்செய்தார். இந்நிலையில்,

 சாலை அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களே ஆன நிலையில், இச்சாலையில் நடைபாதையில் விரிசல் ஏற்பட்டுள்ளது, கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதுகுறித்து விளக்கமளித்துள்ள நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ``டெல்லியில் கடந்த சில தினங்களாக மழை பெய்துவருகிறது. இந்த மழையினால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகவே இந்த நெடுஞ்சாலையின் நடைபாதையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதைச் சரிசெய்யும் பணிகள் நடந்துவருகிறது. விரைவில் சரி செய்யப்படும்" என்றனர். ஏற்கனவே, பாதி பணிகள் முடியாமலே இந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு இருந்துவந்தது. இந்நிலையில், திறக்கப்பட்ட இரண்டே மாதத்தில் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது, டெல்லி வாகன ஓட்டிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored