புதிய நிர்வாகிகளால் ஏர் இந்தியா நிறுவனம் மீண்டெழுமா?Sponsoredஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் தொடர்ச்சியாக நஷ்டத்தில் இயங்கிவந்த சூழலில், அதை மீட்டெடுப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது. அதன் ஒருபகுதியாக, இந்நிறுவனத்துக்கு மானியமாக ரூ.980 கோடி ஒதுக்கப்பட்டது. அடுத்தபடியாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகக்குழுவில் ஐடிசி நிறுவனத்தின் தலைவரான தேவேஷ்வர் மற்றும் 44 பில்லியன் டாலர் மதிப்புள்ள பிர்லா குழுமத்தின் தலைவரான குமார்மங்கலம் பிர்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஒப்புதலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வழங்கியது.

இவர்களைப் போலவே மேலும் நான்கு பொதுத்துறை நிறுவனங்களுக்கு, தனியார் நிறுவன நிர்வாகிகளை மத்திய அரசு நியமித்தது. ஷியாம்விர் ஷைனி மற்றும் குர்மொஹீந்தர் சிங் ஆகியோரை நேஷனல் சீட்ஸ் கார்ப்பரேஷன் லிமிட்டெட் மற்றும் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிட்டெட் ஆகிய நிறுவனங்களுக்கு அதிகாரபூர்வமற்ற தனித்த இயக்குநர்களாக நியமித்தது. தபன் குமார் மண்டல் கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்கும், அருண் டான்டன், பால்மர் லாரி & கோ., நிறுவனத்திற்கும் அதிகாரபூர்வமற்ற தனித்த இயக்குநர்களாக நியமித்தது. இதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவை, ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவிகித பங்குகளைத் தனியாருக்கு விற்க முடிவுசெய்துள்ளது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored