தமிழக முன்னாள் ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங் காலமானார்Sponsoredதமிழக முன்னாள் ஆளுநர் டாக்டர். பீஷ்ம நாராயண் சிங் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

தமிழக முன்னாள் ஆளுநர் டாக்டர். பீஷ்ம நாராயண் சிங் நேற்று காலமானார். தற்போதைய ஜார்க்கண்ட்டில், பலாமு மாவட்டத்தில் பிறந்த காந்தியவாதியான இவர், காங்கிரஸில் இணைந்து 1967ல் பீகார் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 1971ல் கல்வி அமைச்சராகவும், 1972ல் கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார் . 1978ல் பாராளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் கொறடாவாகவும் பதவி வகித்தார். 1980ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அமைச்சரவையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் வீ‌ட்டு வச‌தித் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.  அஸ்ஸாம் மாநில ஆளுநராக 1984 முத‌ல் 1989 வரை பதவி வகித்தார். பின்னர், 1991-ம் ஆண்டு முதல் தமிழக ஆளுநராகப் பதவி வகித்தார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு முதல் முறையாக தமிழக முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தவரும் இவரே. அஸ்ஸாம், தமிழ்நாடு உட்பட ஆறு மாநிலங்களுக்கு ஆளுநராகப் பணியாற்றியுள்ளார். 24 பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராகப் பணியாற்றியுள்ளார். 85 வயதாகும் இவர், நேற்று (01-08-2018) டெல்லி நொய்டா போர்டிஸ் மருத்துவமனையில் காலமானார்.
 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored