காவல் நிலையத்துக்குள் புகுந்து போலீஸாரை சரமாரியாகத் தாக்கிய பொதுமக்கள்!Sponsoredஆந்திராவில், காவல் நிலையத்துக்குள் புகுந்த பொதுமக்கள், போலீஸாரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில், காவல்துறை உதவி ஆய்வாளர் உட்பட  நான்கு  காவலர்கள் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம், அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Photo Credit - ANI

Sponsored


ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம், ராபூர் பகுதியில் செயல்பட்டு வரும் காவல் நிலையத்துக்குள் நேற்று இரவு பொதுமக்கள் புகுந்து, அங்குள்ள ஆய்வாளர் உட்பட போலீஸாரை சரமாரியாத் தாக்கியுள்ளனர். இதுகுறித்து, துணை காவல் கண்காணிப்பாளர் ராம் பாபு கூறுகையில், `குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை நேற்று போலீஸார் கைதுசெய்துள்ளனர்.  இதுதொடர்பாக பிச்சையா, லக்ஷ்மம்மா மற்றும் கன்னக்கம்மா ஆகியோரை போலீஸார் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்தத் தகவலை அறிந்த அவர்களது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், காவல் நிலையத்துக்குள் நுழைந்துள்ளனர். அவர்களை விடுவிக்கக் கோரி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Sponsored


Photo Credit - ANI

அப்போது, காவல் நிலையத்தில் இருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் உட்பட 4 பேரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில், 4 போலீஸார் படுகாயம் அடைந்தனர். போலீஸாரைத் தாக்கும் வீடியோ, மொபைல் போனில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, 4 பேரைக் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்' என்றார். 
 Trending Articles

Sponsored