பசியால் வாடும் நாடுகள் பட்டியலில் பின்தங்கும் இந்தியா? #GlobalHungerIndexSponsoredஉலகில் எந்த ஒரு நாட்டைச் சேர்ந்த மனிதனாக இருந்தாலும் சரி, அவனது அடிப்படைத்தேவைகள் அவனுக்குக் கட்டாயம் கிடைத்தாக வேண்டும் என்பதே உலக நாடுகளின் ஒட்டுமொத்த நிலைப்பாடு. அதில் முதன்மையான தேவை உணவு, பசியால் பலர் இந்த உலகில் வாடுகிறார்கள்.  ஒட்டுமொத்த சமூகத்தின் நிலை இந்தப் பசியால் எப்படி மாறும். அதைக் கணக்கிடும் பணியை வாஷிங்டனைச் சேர்ந்த உலக உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (International Food Policy Research Institute) 2006 ம் ஆண்டிலிருந்து செய்து வருகிறது. வருடம்தோறும் இந்தக் கணக்கிடும் பணி மாநில, தேசிய அளவுகளில் நடைபெற்று உலகப் பசிப்பட்டியலை(Global Hunger Index) வெளியிடும். ஒவ்வொரு நாட்டின் நிலைகளையும் 0 முதல் 100 வரையிலான அளவுகோலில் பொருத்துவர். 0 என்றால் பசியற்ற நாடு என்றும், 100 என்றால் பசியின் உச்சத்தில் உள்ள நாடு என்றும் அளவிடுகிறார்கள்.

இதனை நான்கு முக்கிய காரணிகளை கொண்டு அளவிடுகிறார்கள்.  ஊட்டம் குறைந்த மக்கத்தொகை, உயரத்திற்கேற்ற எடையற்றத்தன்மை, வயத்திற்கேற்ற உயரமின்மை, குழந்தைகள் இறப்பு விகிதம் (Infant Mortality rate). இதனைக் கொண்டு 2017 அக்டோபரில் வெளியான 119 நாடுகள் அடங்கிய அட்டவணைப்படி ஸ்விட்சர்லாந்து 67.69 மதிப்பெண்ணுடன் முதல் இடத்திலும் 63.82 மதிப்பெண்ணுடன் ஸ்வீடன் இரண்டாம் இடத்திலும், நெதர்லாந்து மூன்றாம் இடத்திலும் உள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா, யூ.கே, டென்மார்க், சிங்கப்பூர், பின்லாந்து, ஜெர்மனி, அயர்லாந்து ஆகிய வளர்ந்தநாடுகள் முதல் பத்து இடங்களைப் பெற்றுள்ளன. சீனா 29 வது இடத்திலும் இந்தியா 100 வது இடத்திலும் உள்ளது.

Sponsored


அண்டைநாடுகளான நேபாளம் 72 வது இடத்திலும் மியான்மார் 77 வது இடத்திலும் இலங்கை 84 வது இடத்திலும் பங்களாதேஷ் 88 வது இடத்திலும் பாகிஸ்தான் 106 வது இடத்திலும் உள்ளன. உலகில் மிகவும் பசியால் வாடும் அபாயகரமான நிலை உள்ள நாடக மத்திய ஆப்பிரிக்க குடியரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Sponsored


உலக பசிப் பட்டியலில் ஆசிய நாடுகளில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு அடுத்த 3 வது பசி நிறைந்த நாடாக இந்தியா குறிப்பிடப்பட்டுள்ளது. வெறும் 31.4 மதிப்பெண் பெற்று கவனிக்க வேண்டிய நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய உணவு உற்பத்தி நாடான இந்தியா உலகின் இரண்டாவது அதிக ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்கத்தொகையை பெற்ற நாடாக உள்ளது. இதே பட்டியலில் 2013 ல் 63 வது இடத்திலும் 2014 ல் 55 வது இடத்திலும் 2015 ல் 80 வது இடத்திலும் 2016 ல் 97 வது இடத்திலும் இந்தியா இருந்தது.

இந்த நிலைக்குக் காரணம் 20 சதவிகிதத்துக்கும் அதிகமான ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் எடை குறைந்து காணப்படுகின்றன. 33% வயதுக்கேற்ற உயரமற்றவர்களாக இருக்கின்றனர். ஊட்டச்சத்துக் குறைவும் முக்கியக் காரணியாக உள்ளது. இதற்கு மேலும் ஒரு காரணமாக 2013-2016 ஆண்டுகளில் கூடுதலாக நாடுகள் அட்டவணையில் சேர்க்கப்பட்டதால்தான் இந்தியாவின் இடம் குறைந்துகொண்டே போகிறது என்று கூறப்படுகிறது.

2013 வரை பசியானோர் எண்ணிக்கை விகிதம் 5 க்குக் குறைவாக இருந்தால் அந்த நாடுகளின் பட்டியலை தனி ஒரு இணைப்பாகக் கொண்டு வந்தனர். 2015 க்குப் பின் அது இந்த அட்டவணையுடன் இணைக்கப்பட்டு ஒரே அட்டவணையாகக் கொடுக்கப்படுகிறது. இந்தியாவை விட மக்கள்தொகை அதிகமான சீனா ஆரோக்கிய சீனா 2030 என்று 15 ஆண்டுத் திட்டத்தை 2015 ல் தொடங்கி தன் மக்களுக்கு இணையாக உற்பத்தியை அதிகரித்து பசி நிலையைக் குறைத்து, ஆரோக்கிய சுற்றுச்சூலை ஏற்படுத்தி வருகிறது. 

இந்தியாவில் உணவுப் பொருள்கள் இங்குள்ள மக்களுக்கே போதாத நிலையில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அரசு மலிவு விலைகளில் உணவுப் பொருள்களை மக்களிடம் சேர்க்க அன்னபூரணா திட்டம், மதிய உணவுத் திட்டம், குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் திட்டம் எனக் கொண்டு வந்தாலும் சில பொதுவிநியோகக் கூடங்களின் கவனமின்மை காரணமாக உணவுப் பொருள்கள் பசியானோருக்குக் கிடைக்காமல் போக காரணமாகிறது என்று கூறுகிறார்கள். இந்தியாவில் அனைவருக்கும் தரமான உணவு கிடைக்கும் என்ற உத்தரவாதம் வரும் வரை இந்தப் பட்டியலில் இந்தியா பின்தங்கியிருக்கும் என்பதே நிபுணர்களின் கருத்து, எதிர்க்கட்சியில்லா இந்தியாவுக்காகப் போட்டியிடும் கட்சிகள் பசியில்லா இந்தியாவையும் கவனிக்குமா என்பதுதான் கேள்வி.
 Trending Articles

Sponsored