அமெரிக்க - சீன வர்த்தக பூசல் பற்றிய கவலையால் சந்தையில் சரிவு - 02-08-2018தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்தியப் பங்குச் சந்தையில் பங்குளை விற்பதில் முதலீட்டாளர்கள் தீவிரம் காட்டியதின் காரணமாக இன்று முக்கிய குறியீடுகள் சென்செக்ஸும் நிஃப்டியும் பெரிய சரிவைக் கண்டன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 356.46 புள்ளிகள் அதாவது 0.95 சதவிகித நஷ்டத்துடன் 37,165.16 என முடிவுற்றது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 101.50 புள்ளிகள் அதாவது 0.89 சதவிகிதம் சரிந்து 11,244.70-ல் முடிந்தது.

Sponsored


Sponsored


சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 200 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருள்கள் மீது, ஏற்கெனவே கூறியிருந்தபடி 10 சதவிகிதம் வரி அல்லாமல், 25 சதவிகிதமாக உயர்த்த அமெரிக்க அரசு தீர்மானித்திருக்கிறது என்ற செய்தியும், இதையடுத்து சீனாவும் தன் பங்குக்கு இதைக் கடுமையாக எதிர்கொள்வோம் என்று கூறியிருப்பதாக வந்திருக்கும் செய்தியும், அமெரிக்கா - சீன நாடுகளுக்கிடையேயான வர்த்தக பூசல் விஸ்வரூபமெடுக்கும் என்ற கவலையை முதலீட்டாளர்களிடம் தோற்றுவித்திருக்கிறது. 

Sponsored


இதன் காரணமாகவும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் அடுத்த மாதம் நிச்சயமாக தன்னுடைய வட்டி விகிதத்தை உயர்த்தும் எனவும், மீண்டும் ஓர் உயர்வு இந்த வருட இறுதிக்குள் இருக்கும் என்றும், வரும் ஆண்டு இரண்டு உயர்தல்கள் இருக்கலாம் என்றும் பெடரல் ரிசர்வின் நேற்றைய  அறிக்கை உணர்த்துவதும் சந்தைகளில் சரிவு ஏற்படக் காரணமானது.


இன்று விலை சரிந்த பங்குகள் :

பார்தி ஏர்டெல் 2.8%
கோடக் பேங்க் 2.5%
மாருதி சுசூகி 2%
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1.9%
ஹவுசிங் டெவெலப்மென்ட் ஃபைனான்ஸ் 1.9%
சொனாட்டா சாஃப்ட்வேர் 5%
JBF இண்டஸ்ட்ரீஸ் 4.9%
மரிக்கோ 4.8%
எல்&டீ டெக்னாலஜி 4.7%
GATI  4%
அதானி பவர் 3.8%
DLF 3%


விலை அதிகரித்த பங்குகள் :

லூப்பின்  2.7%
பவர் கிரிட் 2.2%
டாக்டர் ரெட்டி'ஸ் 2.2%
பாரத் பெட்ரோலியம் 1.55%
ஆதித்யா பிர்லா ஃபாஷன்ஸ் 12.5%
திலிப் பில்ட்கான் 7%
ஜிண்டால் பாலிஃபில்ம்ஸ் 6.5%
ஜெட் ஏர்வேஸ் 6.5%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1,343 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1325 பங்குகள் விலை சரிந்தும், 156 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.Trending Articles

Sponsored