உத்தரப்பிரதேசத்தில் கன மழை - 154 பேர் பலி!Sponsoredஉத்தரப்பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பின் காரணமாக கடந்த மாதம் 154 பேர் பலியாகியுள்ளனர்.

வட மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறின. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா போன்ற பல மாநிலங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. அப்பகுதியில் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வீடுகள் நீரில் மூழ்கின. மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தையே புரட்டிய மழையால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், கடந்த  ஒருமாதத்தில் உத்தரப்பிரதேசத்தில் பெய்த கனமழையால் 154 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்தக் கனமழை காரணமாக, 131 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், 187 கால்நடைகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 1,259 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. 

Sponsored


Sponsored


Sponsored