உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் - காலிறுதியில் சாய்னா, சிந்து!Sponsoredஉலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர்  சீனாவில் நடைபெற்றுவருகிறது. இதில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் நடைபெற்றது. மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நேவால் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டெனொன் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் 21-16, 21-19 என்ற நேர் செட்களில் 47 நிமிடங்களில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார். இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை பேட்மின்டன் போட்டிகளில் தொடர்ந்து எட்டு முறை காலிறுதிக்குள் நுழைந்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். இவர் காலிறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலின் மரினுடன் மோதுவார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி. சிந்துவும், தென்கொரியாவின் சங் ஜி ஹியூன் உடன் மோதி 42 நிமிடங்களில் 21-10, 21-18 என்ற நேர் செட்களில் வெற்றிபெற்றார். இவர் காலிறுதி ஆட்டத்தில் நொசொமி ஒகுஹரா உடன் மோதுவார்.

Sponsored


ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரரான சாய் பிரனீத் ஹன்ஸ் கிரிஸ்டியனை 21-13, 21-11 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் மலேசியாவின்டேரன் லீவெ உடன் மோதி, 18-21, 18-21 என்ற செட் கணக்கில்  தோல்வியடைந்தார்.

Sponsored
Trending Articles

Sponsored