`சீனாவின் அதிகாரத்துக்கு அடிபணிந்துவிட்டார்' - சுஷ்மா ஸ்வராஜை விளாசும் ராகுல் காந்தி! 



Sponsored



'டோக்லாம் பிரச்னையில், சீனாவின் அதிகாரத்தின் முன் சுஷ்மா ஸ்வராஜ் அடிபணிந்துள்ளார்' என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இந்தியா-சீனா-பூடான் நாட்டு எல்லைகள் சந்திக்கும் முச்சந்திப்பு இடமாக சிக்கிம் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது,  'டோக்லாம்' . இங்கு, கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் சாலை அமைக்க முயற்சித்தது. அதை, இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. ஆதனால், இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே 73 நாள்கள் மோதல்போக்கு நீடித்தது. இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகுறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி சுமுக நிலை உருவாக்கப்பட்டது. 

Sponsored


இந்நிலையில், டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் தனது ஆக்கிரமிப்புப் பணிகளைத் துவக்கியுள்ளதாகவும்,  அதை இந்தியா பொருட்படுத்தவில்லை எனவும் அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தவே, இதுகுறித்து மக்களவையில் விளக்கம் அளித்த சுஷ்மா ஸ்வராஜ், ``இவ்விவகாரத்தில் தூதரக அளவில் பேசப்பட்டு தீர்வு காணப்பட்டுவிட்டது. அங்கு தற்போது அமைதி நிலவிவருகிறது. அமைதி நிலவ வேண்டும் என்ற கருத்தை இருதரப்பும் ஏற்றுக்கொண்டுள்ளது" எனத் தெரிவித்தார். 

Sponsored


சுஷ்மாவின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,  இதை விமர்சித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``மக்களவையில் டோக்லாம் தொடர்பாக சுஷ்மா தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளார். அவரது பேச்சு எல்லையில் உள்ள ராணுவ வீரர்களை அவமானப்படுத்தியுள்ளது. சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பை இந்தியா பொருட்படுத்தாமல் உள்ளது. இந்த விவகாரத்தில், சீனாவின் அதிகாரத்துக்கு சுஷ்மா ஸ்வராஜ் அடிபணிந்துவிட்டது ஆச்சர்யமாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார். 



Trending Articles

Sponsored