அமித் ஷா உ.பி பயணம் - காவி நிறத்தில் மாறும் ரயில் நிலையம்!பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா நாளை மறுநாள் உத்தரப்பிரதேசம் வருவதையொட்டி, அங்குள்ள ரயில் நிலையத்துக்கு காவி நிறம் பூசப்படுகிறது. 

Sponsored


உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள முகல்சரய் என்ற ரயில் நிலையம், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீனதயாள் உபாத்யாய் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த ரயில் நிலையத்தின் முகப்புப் பலகையைத் திறக்கும் நிகழ்ச்சி, நாளை மறுநாள் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்று பலகையைத் திறந்துவைக்க உள்ளார். இதில், ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். 

Sponsored


Sponsored


உத்தரப்பிரதேச அரசின் அறிவிப்பின்படி கடந்த ஜூன் 5-ம் தேதியன்று இந்த ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலேயே மிகவும் பரபரப்பாக்க இயக்கும் நான்காவது ரயில் நிலையம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. இந்திய ரயில் நிலையத்துக்கு பெயின்ட் அடிக்கும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன. இது, நாளைக்குள் முடிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த பெயின்ட் அடிக்கும் பணியை எடுத்துள்ள கான்ட்ராக்டர் கூறும்போது, “ இந்த ரயில் நிலையத்துக்கு வெள்ளை மற்றும் காவி நிறத்தில் பெயின்ட் அடிக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது” என்று கூறியுள்ளார். 

ரயில் நிலையத்துக்கு காவி நிறம் பூசப்படுவது அமித் ஷாவின் வருகைக்காகத்தான் என அரசியல் வட்டாரங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவருகிறது. Trending Articles

Sponsored